கடற்புலிகளின் முல்லைத்தீவு பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்கண்கானிப்புத்தளம் அப்போது வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு இராணுவ கூட்டுதளத்திற்க்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது , இதனை அழித்தொழிக்க சிங்களப்படை பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும்அவை வெற்றிபெறவில்லை .
இருந்தும் சிங்களக் கடற்படை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கடல்வழி மூலம் தரையிறங்கி தாக்குவற்காக அமெரிக்காவில் கடற் பயிற்சி பெற்று நாடுதிரும்பிய சிங்களக்கடற்படையைவைத்து சிறப்புக் படகு படையனி ( SPECIAL BOAT SQUARD) ஒன்றை உருவாக்கி அதன் முதலாவது தாக்குதலாக சிங்களக் கடற்படை முல்லைத்தீவு பூனைத்தொடுவாய் கடற்புலிகளின் கடற்கண்கானிப்புத்தளத்தை தெரிவு செய்தது,அதற்கமைவாக 20-10-1996 அன்று காலை வெற்றிலைக்கேணி முகாமிலிருந்து ஆட்லறி மற்றும் மோட்டார் சூட்டாதரவுடனும் கடற்படை மற்றும் விமானப்படையின் பலமான தாக்குதல் வழங்க தனது கன்னித்தரையிறக்கத்தை மேற்கொண்டது இச் சிறப்புக் கடற்படை மீது கண்கானிப்புத்தளப் பாதுகாப்பிற்காக நின்ற கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படையணியான சூட்டி படையணியினர் சிங்களப்படைகளின் செறிவான தாக்குதலுக்கும் மத்தியில் ஒரு வீரம்செறிந்த மின்னல்வேக முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர் -இவ்வெற்றிகர முறியடிப்புத்தாக்குதலில் இரண்டு படகு மூழ்கடிக்கப்ட்டதுடன் பல கடற்படையினர் கொல்லப்பட்டனர் , பல நவீனரக ஆயுதங்களும் கைப்பற்றப்படன, இத் தாக்குதலிலிலேயே கடற்புலிகளால் இலகுவாகக் கையாளக்கூடிய அதி நவீன ஒட்டோ டொங்கான் முதன்முதலாகாக் கைப்பற்றப்பட்டது, இந்த வெற்றிகர முறிப்புத்தாக்குதலில் நாற்பத்தியிரண்டு போராளிகள் பங்கேற்றனர் . இத் தக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர்,இத்தாக்குதலை அப்போதைய சூட்டி படையணித் தளபதி களத்தை வழிநடாத்த அனைத்து நடவடிக்கைளையும் ஒருங்கினைத்து கட்புலிகனின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தியிருந்தார், பல கற்பனைகளோடும் தொடர்ந்து கடல்வழிமூலம் தரையிறங்கி விடுதலைப்புலிகளுக்கு தொல்லை கொடுக்கலாம் என நினைத்த சிங்கள தலைமைக்கும் கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படைய ணியான லெப்,கேணல் , சூட்டி படையணிப் போராளிகள் கொடுத்த தக்க பதிலடியால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இனிமேல் தரையிறங்கித் தாக்க முடியாது என்பதால் சிங்களத்தின் சிறப்புப் படைய ணியும் கலைக்கப்பட்டது ,இத்தாக்குதலில் பங்குபற்றியவரின் உறுதுணையுடன்,
எழுத்துருவாக்கம், சு,குணா,