Read Time:1 Minute, 18 Second
அண்மைய சில நாட்களாக மக்கள் எரிபொருளைப் பெறுவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர்.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கள்ளச்சந்தை மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சாதாரண மக்கள் எரிபொருட்களை பெறுவதை அவர்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நேற்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
இதன்போது எரிபொருள் நிலையங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்த்து, மக்கள் எரிபொருளை பெறுவதை இலகுபடுத்துவதற்காக தங்களால் இயன்றதை செய்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்
