Read Time:1 Minute, 14 Second
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் இன்றைய தினம் யாழ்ப்பாண பொது தூலகத்திற்கு விஐயம் செய்தார்.
இதன் போது யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகர அதிகரிகளினால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்ப்பு வழங்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணணிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.



அத்தோடு இந்த நூலகத்தினை இணையவழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா என கோரிக்கையை முன்வைத்தபோது தாங்கள் அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருந்தார் என்றார்.