யாழ். இந்துக்கல்லூரி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

0 0
Read Time:4 Minute, 14 Second

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் “திடல்” திட்டத்தினூடு புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானம் 12/11/2021 உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டரை வருடங்களாக சுமார் ஐந்தரை கோடி ரூபா செலவில் இம்மைதானம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது.


கல்லூரி சமுகம் அருகிலுள்ள காணியொன்றை கொள்வனவு செய்ததன் மூலம் புனரமைப்பு காலத்தில் மைதானத்தின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடப்படத்தக்கது.

  1. சீரற்ற புற்தரையை கொண்ட மைதானமாக இருந்ததினால் விளையாட்டு வீரர்கள் பல அசௌகரியங்களை கொண்டிருந்தனர்.
    அதேவேளையில்,
  2. மழைநீர் தேங்குவதால் மைதானத்தை வருட இறுதிகளில் முற்றாக பயன்படுத்த முடியாத சூழலும் இருந்தது.தவிர,
  3. போதியளவான நீர்ப்பாசன வசதியின்றி இருந்தமை உட்பட இதர சில காரணங்களால் புற்தரையினை சீராக பராமரிக்க முடியாமலும் இருந்தது.
    மேற்படி காரணங்களுடன்
  4. வீரர்களுக்கான மலசலகூட வசதி
  5. நேர்த்தியான score board
  6. பாதுகாப்பான எல்லை மதில்கள்
    போன்ற பல அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘திடல்’ திட்டமானது ஏறக்குறைய தன் நோக்கத்தை பூர்த்திசெய்து நிறைவுக்கு வந்துள்ளது.
    தற்போதய மைதானம்
  7. மைதானங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் புல் வகைகளில் ஒன்றினால் பேணப்படுகின்றது.
  8. அப்புற்தரையை பேணுவதற்கு அவசியமான தானியங்கி நிலக்கீழ் நீர்ப்பாசனம் நிறுவப்பட்டுள்ளது.
  9. புற்தரையை சரியாக பேணுவதற்காக இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு பயன்பாட்டிலுள்ளது.
  10. நேர்த்தியான சுற்றுமதில் அமைக்கப்பட்டு கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  11. அணிகளுக்கான Dressing Room மற்றும் அணிகளுக்கு தேவையானளவு பிரத்தியேக குளியல்/கழிவு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  12. இலத்திரனியல் score board மற்றும் அதற்கான ஏற்பாடுகள் நிறுவப்பட்டுள்ளன.
  13. துடுப்பாட்டப்பயிற்சிக்கான புற்தரை (Turf nets) அமைக்கப்பட்டுள்ளது.
  14. போதிய சரிவுடன் (slope) கூடிய துடுப்பாட்டத்திற்குகந்த மைதான தரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  15. அழகிய மூன்று நுழைவாயில்கள் நிறுவப்பட்டுள்ளன.
  16. மழைநீரை (சாதாரண மழைநீரை) உள்ளுறிஞ்சக்கூடிய நான்கு நிலக்கீழ் நீர்த்தொட்டிகள் (sump) நிறுவப்பட்டுள்ளது.
  17. மைதானத்தினால் ஏந்தப்படும் மழைநீரை விரைவாக உறிஞ்சி நிலக்கீழ் நீர்த்தொட்டிக்குள் சேகரிக்கக்கூடிய பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.
    இவையுட்பட பல்வேறு நுணுக்கங்களுடன் இத்திட்டம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது என்பதில் பெருமையும் மகிழ்ச்சியுமே
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment