போராளிகள் கட்டமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சி.செ.புலிக்குட்டி எழுதிய தடைகள் தகரும் தமிழீழம் மலரும் என்கின்ற நூல் வெளியிட்டு நிகழ்வு 31.10.2021 இன்று முன்னாள் போராளி அகிலரூபன் தலைமயில் ஆரம்பமானது.
இன்நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் பொதுச்சுடரினை பேர்ண் ஞானலிங்கேஸவரர் ஆலய தமிழ் அரச்சகரும் தமிழ் சைவநெறிக்கூட இணைப்பாளருமான சிவருசி தர்மலிங்கம்
சசிக்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடரந்து பொதுமாவீரர் திருவுருவபடத்திற்கான ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை பேர்ண் மாநிலப் பொறுப்பாளர் திரு. மூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார் தொடர்ந்து
பொதுமாவீரர் திருவுருவபடத்திற்கான மலர்மாலையினை மாவீரர் லெப்டினன் கேணல் அன்பழகன் அவர்களின் துணைவியார் திருமதி தமிழ்நிலா அவர்கள் அணிவித்தார்
தொடரந்து மலர் வணக்கம் நடைபெற்றது. மலர் வணக்கத்தினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளை மகளீர் நிர்வாக பொறுப்பாளர் அன்பழகி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை
தலைமையுரையினை தொடரந்து நூல் வெளியிடு தடைகள் தகரும் தமிழீழம் மலரும் என்கின்ற நூலினை தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளி காந்தன் அவர்கள் வெளியிட்டுவைக்க மாவீரர் மேஜர் ராஜேஸ் அவர்களின் சகோதரன் வேலாயுதம் நகுலேந்திரன் பெற்றுக்கொண்டார்.
தொடரந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து
ஆசிஉரை. ஆசிஉரையினை பேர்ண் ஞானலிங்கேஸவரர் ஆலய தமிழ் அர்ச்சுகரும் தமிழ் சைவநெறிக்கூட இணைப்பாளருமான சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்அவர்கள் ஆற்றினார்
தொடர்ந்து வெளியீட்டு உரையினை தமிழ் களரி ஆவணக் காப்பக பொறுப்பாளர் தில்லையம்பலம் சிவகீர்த்தி. மற்றும் .இ. பிரபா மற்றும் முன்னாள் போரளி செங்கோல் ஆகியோர் ஆற்றினர்.
தொடர்ந்து ஆசிரியர் திருமதி மீனா பிரகாஸ் அவர்களின் நெறியாள்கையில் உருவான சாத்வீக நடன ஆலய மாணவர்களான செல்வி் தேனுஜா அமலதாஸ் செல்வி துவராகா அமலதாஸ் செல்வி திவ்யா தேவராசா செல்வி பிரவின்சியா கொலம்பஸ் ஆகிய மாணவர்கள் வழங்கிய கரும்புலிகள் நினைவுசுமந்த நடனநிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து முன்னாள் போராளி சுஜிபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பொது அமைப்புக்களின் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழீழ
விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.