07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினருடனான கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் நிறோயன் அவர்கள் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவுக்குப் பதிலடியாக ஒரு தாக்குதலும்
அதேவேளை திருகோணமலைக்கான விநியோக நடவடிக்கையும் தலைவர் அவர்களால் கடற்புலிகளிடம் கொடுக்கப்படுகிறது. அதற்கமைவாக 14.10.1999 அன்று அப்போதைய கடற்த்தாக்குதல் தளபதியான லெப் கேணல் இரும்பொறைமாஸ்ர் அவர்கள் தலைமையிலான அனைத்துத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கடற்சண்டைப்படகுகளும் லெப் கேணல் மங்களேஸ் அவர்கள் தலைமையிலான விநியோகப்படகுகளும் ஒழுங்கமைக்கப்படுகிறது. திட்டத்தின்படி விநியோக நடவடிக்கை முடிவுற்றதும் எமது வலிந்த தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடற்தாக்குதல் அணிகள் விநியோகப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விநியோகப் படகுகள்மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளை கடற்சண்டை ஆரம்பமானது. இச்சமரில் லெப் கேணல் இரும்பொறை மாஸ்ரதும் லெப் கேணல் பழநியினதும் தாக்குதலால் ஒரு டோறாப்படகு நகரமுடியாமல் நிற்க அவ்வேளையில் பழநி கூட்டி வநத கரும்புலிப்படகை அடிவேண்டி நகரமுடியாமல் நின்ற டோறாப்படகிற்கு
பாகையைச் சொல்லி அனுப்பி கட்டளை வழங்கிக்கொண்டிருக்கையில் இருடோறா பழநியின் படகுமீது பக்கவாட்டாக தாகக்குதல் நடாத்த பழநி அவ்டோறாக்கள் மீது தாக்குதல் தொடுத்தான்.

அதே நேரம் டோறா மீது தாக்குதல் நடாத்தச் சென்ற கரும்புலிப்படகு காலநிலை சீரின்மையால் டோறாவை கண்டுபிடிக்க முடியாதலால் திரும்பிக்கொண்டிருந்த வேளையில்
லெப் கேணல் இரும்பொறை மாஸ்ருடன் நின்ற கரும்புலிப்படகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்நடவடிக்கையில் ஆறு கடற்கரும்புலிகள் உட்பட ஏழு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
எழுத்துருவாக்கம்…சு.குணா.






