07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காவின் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதலில் வீரச்சாவடைந்த மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப். வுpதிமாறன்,, மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் இருபதாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 07.02.2025 வெள்ளி அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.
மேலும்Day: February 7, 2025
லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் ஆகிய போராளிகளின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் உருவாக்கும் பணி ஆரம்பம்
வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கம் செய்யும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் இன்று அப் பணிகள் ஆரம்பமானது.
மேலும்