பிரான்சில் பல்கலைப் பட்டம்பெற்ற தமிழ் மாணவர்கள் கேணல் பருதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவுசுமந்து மதிப்பளிப்பு!

பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுசுமந்து புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்துப் பட்டம்பெற்ற தமிழ் மாணவ மாணவியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு புளோமெனில் பகுதியில் நேற்று (08.12.2024) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொருளாளர் திருமதி வலன்ரீனா அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 09.01.1997 அன்று ஆனையிறவு – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்த கப்டன் சுபாநந்தினி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

மேலும்