ஈழத்தில் தமிழ் அருட்சுனையர் பட்டயக்கல்வி

0 0
Read Time:6 Minute, 18 Second

சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்தை நடுவமாகக்கொண்டு கருவறையில் தமிழ் வழிபாட்டினை ஆற்றிவரும் தமிழ் மன்றம் ஆகும். 1994ம் ஆண்டு முதல் இம்மன்றம் செயற்பட்டு வருகின்றது.

தற்போது மூன்று நாடுகளில் ஐந்து ஊர்களில் சைவநெறிக்கூடத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ் வழிபாடு ஆற்றப்பட்டு வருகின்றது. சுவிசில் பேர்ன்நகரில் தோற்றம்பெற்ற சைவநெறிக்கூடத்தின் தமிழ்வழிபாட்டுத்திருக்கோவில் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், சுவிற்சர்லாந்தில் பிரெஞ்சுமொழி பேசும் வலே மாநிலத்தில் மர்த்தினியிலும், ஈழத்தில் யாழ் இணுவை ஊரிலும், இங்கிலாந்தில் கைவீக்த்தில் அருள்ஞானமிகு உச்சிமுருகன் கோவிலாகவும் அமைந்துள்ளது. கடந்த 15. 07. 2024 இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் வளத்தாப்பிட்டி ஊரில் அருள்ஞானமிகு ஆதிசக்தி உடனாய ஆதிலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு நடைபெற்று நாளும் தமிழ் வழிபாடு நடைபெறும் கோவிலாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும், தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளிலும் தாய்த்தமிழ் வழிபாட்டிற்கான வேண்டுகைகள் கூடிவருகின்ற காலத்தில் நன்கு பயிற்சி பெற்ற தமிழ் அருட்சுனையர்களின் தேவை தற்போது உள்ளது. மேலும் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பல பகுதிகளிலும் வழிபாட்டினையும், வாழ்வியல் சடங்குகளை ஆற்றிவைக்கும் சமயக்குருமார்கள் தேவை உள்ளது. இத்தேவைகளை நிறைவுசெய்யும் வகையிலும், அதேவேளை தமிழர் தாயகத்திலிருந்து தக்க தகையுடன் உலகம் முழுவதும் தமிழ் வழிபாட்டினை செம்மையாக ஆற்றிவைக்க யாழ். இணுவில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் தமிழ்;வழிபாட்டுப் பயிற்சிநிலையத்தை அமைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைத் துறை வாயிலாக பலநூறு சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கு சிவ வேள்வி, ஆகம நெறி வழி பயிற்சி அளித்தவரும், தெய்வத் தமிழ் அறக்கட்டளை, தமிழ் வழிப்பாட்டு பயிற்சி மையம் என்ற அமைப்பின் வாயிலாகவும் பலநூறு பேர்களுக்கு வாழ்வியல் சடங்குகள், குடமுழுக்கு, சிவதீக்கை, சைவ வாழ்வியல் சடங்குப் பயிற்சி அளித்தவருமான செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார் அவர்களை இந்நோக்கத்திற்காக சைவநெறிக்கூடம் இலங்கைக்கு அழைத்திருந்தது. அழைப்பினை ஏற்று முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் ஐயா அவர்கள் தனது மகன் சிவத்திரு. திருச்சுடர்நம்பி அவர்களுடன் 31.07.2024 இலங்கைக்கு வருகை அளித்தார். 

இனிவரும் காலங்களில் தமிழ் அருட்சுனையர்கள் தமிழ்வழிபாட்டுப்பயிற்சியுடன் பட்டயக்கல்வியினை பெறுவதற்கு வாய்ப்பு அமைக்கும் நோக்கில் 01.08.2024 இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். பேராசிரியர். வல்லிபுரம் கனகசிங்கம், இந்து நாகரீகத் துறைத் தலைவர் முனைவர். நாகையா வாமன் ஆகியோரை முனைவர் முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார், சைவநெறிக்கூட இணைப்பாளர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், யாழ். இணுவை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் தனியொளிச்சிவம் செல்லத்துரை பிரசாத், வளத்தாப்பிட்டி ஆதிசிவன் திருக்கோவில் அருட்சுனையர் தனியொளிச்சிவம் பிரதாப், தெய்வத்தமிழ் அறக்கட்டளை அமைப்பின் சிவத்திரு. திருச்சுடர்நம்பி, மேலும் தமிழ் அருட்சுனையர்கள் நேரில்கண்டு இப் பல்கலைக்கழகத்தில் தமிழ் அருட்சுனையர் பட்டயக்கல்வியினை வழங்குவதற்கு வேண்டுகை வைத்தனர். மேலும் தமிழ் அருட்சுனையர் பட்டயக்கல்விக்கான முன்வரைவுத்திட்டம் மற்றும் பாடநூல் வரைவினை கையளித்த்தனர்.

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடாத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் எட்டு குழாம்கள் வெற்றிகரமாக இதுவரை நடந்து வருகின்றது. எதிர்காலத்தில் ஈழத்திலிருந்து தமிழர்கள் வாழும் நாடுமுழுவதும் பட்டயக்கல்வி பெற்று தமிழ் அருட்சுனையர்கள் தம் பணிதொடர்வர், இது தமிழ்மக்களுக்கு மிகுபயன் அளிக்கும் என்று சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் நம்பிக்கை வெளியிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment