மாமனிதர் பொறியியலாளர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள்

உலகமே வியந்த தமிழீழ மண்ணின் மாமனிதர் பொறியியலாளர் பேராசிரியர் அழகையா துரைராசா         10.11.1934 ~11.06.1994 . மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர். துரை விதியின் சொந்தக்காரர்.

மேலும்

கடற்கரும்புலி மேஜர் இளங்கோ வீரவணக்க நாள் இன்றாகும்.

11.06.1996 அன்று யாழ். மாவட்டம் காரைநகர் கடற்படைத் தளத்தில் ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் P 232, P244 இரு ‘சவட்டன்’ கரையோர ரோந்துக் கலங்களையும், ஒரு “பேபி டோறா” கலத்தையும் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சிலோஜன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மேஜர் இளங்கோ / ஜீவரஞ்சன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள்

11.06.2008 அன்று வடபோர்முனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘இம்ரான் – பாண்டியன் படையணி துணைத் தளபதி’ லெப். கேணல் றெஜித்தன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

லெப். கேணல் சாள்ஸ் நினைவு நாள்

11.06.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்களை தாக்க வந்த சிறிலங்கா கடற்படையினரின் இரு நீருந்து விசைப்படகுகள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘கடற்புலிகளின் தாக்குதல் தளபதி’ லெப். கேணல் சாள்ஸ் / புலேந்திரன், லெப்டினன்ட் மகான் ஆகிய வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்