குசான்வில் பிரெஞ்சு தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா கடந்த 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.
மங்கல விளக்கை முதன்மை விருந்தினர் குசான்வில் நகர பிதா திரு.அப்டெல்அசிஸ் அமிதா (Abdelazie HAMIDA), துணை நகர பிதா திருவாட்டி கிறிஸ்டியன் பாய்ஸ் செவோஷ்சே (Christiane BAILS CHEVAUCHE) சிறப்பு விருந்தினர்களாகிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதி திருமிகு பாலசுந்தரம், தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு நாகஜோதீஸ்வரன், சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதி திருமிகு நிதிபன், குசான்வில் சங்கத்தலைவர் திருமிகு காணிக்கைநாதன், குசான்வில் சங்கத்தின் செயலாளர் திருமிகு காந்தன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து அகவணக்கமும் பின்னர் குசான்வில் தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழ்ச்சோலை கீதமும் இசையுடன் பாடப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு நடனமும் பரத நடனங்களும் எழுச்சி நடனமும் இடம்பெற்றன. மேலும் குழுப்பாடல்கள், கவிதைகள், குழுப் பேச்சுக்கள், இசைக்கச்சேரி ஆகியவற்றுடன் ஆசிரியர் மதிப்பளிப்பு, முதன்மை விருந்தினர் உரை, சான்றிதழ் வழங்குதல், சிறப்பு விருந்தினர் உரை, வெள்ளிவிழா மலர் வெளியீடு ஆகியவை இடம்பெற்றன. நிகழ்வுகள் யாவும் இரவு 20.30 மணிக்கு நிறைவெய்தியது..




