பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை – ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் மேஜர் காந்தரூபன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, துடுப்பெடுத்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள்
நேற்று 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பொம்பதூர் பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில் மாவீரர் பொதுப்படம் மற்றும் மேஜர் காந்தரூபன் அவர்களின் திருவுருவப் படம் முன்பாக ஈகைச்சுடரினை கடந்த 20.03.2009 அன்று வீரச்சாவடைந்த மேஜர் மலரவனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து சம்மேளனப் பிரதிநிதிகள், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர், உறுப்பினர்கள் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.



ஆறுக்கு மேற்பட்ட விளையாட்டுத்திடல்களில் சமநேரத்தில் போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.

போட்டிகளின் நிறைவாக வெற்றிபெற்ற அணிகளுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டன.













உதை பந்தாட்டப் போட்டி முடிவுகள்
13 வயதின் கீழ் பிரிவு (ஆண்கள்)
முதலாம் இடம்: FC 93 வி.க.
இரண்டாம் இடம்: ஈழவர் வி.க.
மூன்றாம் இடம்: நல்லூர்ஸ்தான் வி.க.
15 வயதின்கீழ் பிரிவு (ஆண்கள்)
முதலாம் இடம்: FC 93 வி.க.
இரண்டாம் இடம்: ஈழவர் வி.க.
மூன்றாம் இடம்: நல்லூர்ஸ்தான் வி.க.
17 வயதின்கீழ் பிரிவு (ஆண்கள்)
முதலாம் இடம்: அரியாலை வி.க.
இரண்டாம் இடம்: றோமியோ நவம்பர் வி.க.
மூன்றாம் இடம்: ஈழவர் வி.க.
வளர்ந்தோர் பிரிவு (ஆண்கள்)
முதலாம் இடம்: _NS PARIS வி.க
இரண்டாம் இடம்: றோமியோ நவம்பர் வி.க.
மூன்றாம் இடம்: FC 93 வி.க.
பெண்கள் பிரிவு
முதலாம் இடம்: நல்லூர்ஸ்தான் வி.க.
இரண்டாம் இடம்: விண்மீன்கள் வி.க.
கரப்பந்தாட்டம்
முதலாம் இடம்: 94 BOYS
இரண்டாம் இடம்: PARIS KING
மூன்றாம் இடம்: MOISSY TIGERS
துடுப்பெடுத்தாட்ட இறுதிப் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணத்தால் வேறு ஒரு தினத்தில் இடம்பெறவுள்ளதால் அதன் முடிவுகள் பின்னர் வெளியிடப்படும்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு