சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படைகப்பல்கள் பின் தொடர்ந்தது.இதனை கப்பலிலிருந்தவர்கள் ராடர்மூலம் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தகவல்களைத் தெரியப்படுத்தினர்.
அவர்களும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.இந்திய கடற்படையோ சரணடையும்படி தொலைத்தொடர்புக்கருவியூடாக அச்சுறித்துக் கொண்டேயிருந்தது மட்டுமில்லாமல் .இடைக்கிடையே துப்பாக்கிச்சூடும் கப்பலுக்கு அண்மையாக நடாத்திக்கொணடிருந்தனர்.சரணடைவது விடுதலைப் புலிகளின் மரபல்ல அதுமட்டுமன்றி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் போராளிகளும் தரையிலும் கடலிலும் எதிரிசரணடையச் சொன்னபோது எப்படிச் செய்து காட்டினார்களோ அதற்கமைவாக செய்ய வேண்டிய சூழல் கப்பலிலிருந்தவர்களுக்கு ஏற்பட்டது .ஆனால் இக்கப்பலில் பொதுமக்களும் இருந்தார்கள்.கிட்டண்ணாவின் கப்பலிலிருந்தவர்களை கிட்டண்ணாவின் கட்டளைக்கேற்ப போராளிகளால் கடலுக்குள் தள்ளிவிட்டு அவர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டெடுத்தனர்.ஆனால் இக்கப்பலில் இருந்த மக்கள் தாங்கள் கப்பலிலிருந்து குதிக்கமாட்டோம் என விடாப்பிடியாக இருந்தார்கள்.தவிர இக்கப்பலில் கூடுதலான போராளிகளும் இக்கப்பலில் இருந்ததால் கப்பலிலிருந்தவர்களில் சில கடற்கரும்புலிகளும் இருந்தார்கள்.அக்கடற்கரும்புலிவீரர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தார்கள் அத்திட்டமானது தாங்கள் கப்பலை தொடர்ந்து செலுத்துவதென்றும் இந்தியக்கடற்படையினர்.நெருங்கிவந்து எம்மைக் பிடிக்க முயற்சித்தால் விடுதலைப் புலிகளின் மரபிற்கினங்க நாங்கள் கப்பலையும் அழித்து எங்களையும் அழிப்போமெனக் கூறி கப்பலிலிருந்தவர்களை
கப்பலிலிருந்த றபர் படகின் மூலம் வெளியேற்றுவதுமாகும்.இத்திட்டம் சர்வதேசப் பொறுப்பாளருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதற்கமைவாக மூன்று கடற்கரும்புலிகள் கப்பலில் இருக்க முயற்சித்தபோதும் .சர்வதேசப் பொறுப்பாளரின் கடும்முயற்சியின் பின் இரண்டு பேராக்கப்பட்டனர்.அவ்விருவரும் நீண்ட காலமாக ஒன்றாக இவ் விடுதலைப் போராட்டத்தில் பயணித்தவர்களான கடற்கரும்புலி மேஜர் நவநீதன் கடற்கரும்புலி கப்டன் தோழன் அக்கடற்கரும்புலிகளின் திட்டத்திற்கமைவாக 10.03.1999 அன்று இரவு கப்பலிலிருந்தவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கப்பலைக் கைப்பற்ற இந்தியக் கடற்படை முயற்சித்த போது இந்தியாக் கடற்படையிடம் சிக்காது அதேநேரம் சரணாகதியாகாமலும் கப்பலைத் தகர்த்து தங்களையும் ஆகுதியாக்கிக் கொண்டனர்.ஏனையவர்களை இரண்டு நாட்களின் பின்னர் அமைப்பின் வேறொரு கப்பலால் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து……
சு.குணா


