ஈழ மக்கள் விடிவுக்கான ஐந்தம்சக் கோரிக்கையை முன் வைத்து அறப்போர் வழியில் மேற்கொள்ளப்பட்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் அந்த இளம் பிஞ்சின் மனதில் கூட ஆழமான உணர்வலைகளை உண்டாக்கியிருந்தது.
மேலும்Day: September 25, 2023
தியாகதீபம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.
மேலும்