ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 14வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்.

18/05/2023 வியாழக்கிழமை பிற்பகல்14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட
தமிழின அழிப்பு நினைவு நாள் 2023!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது இம்முறை 17.05.202 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன்; நினைவுகூரப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்