தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையை வந்நதடைந்தது. நாளை திங்கட் கிழமை 06/03/2023 நடைபெறும் கவனயீர்பு போராட்டத்திற்கு அறைகூவல்!
கடந்த 17 நாளாக பிரித்தானியா , நெதர்லாந்து , பெல்சியம் , லுக்சாம்பூர், யேர்மனி , பிரான்சு சுவிசு நாடுகளில் முக்கியமான அரசியல் மையங்களாக இருக்கக்கூடிய பிரித்தானிய பிரதமர் வதிவிடம்,அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியம், மாநகரசபைகள், ஐரோப்பிய ஆலோசனை அவை, ஐரோப்பிய பாராளுமன்றம்… மற்றும் நகர பிதா,முதல்வர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், உள் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் , பன்னாட்டு ஊடகங்கள், பல்லின வாழ்மக்கள் என அனைவரிடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 52 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு சிங்களப் பேரினவாத அரசுகள் திட்டமிட்டு மேற் கொண்ட தமிழின அழிப்பிற்கு சிங்களப்பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு எனவும் அதற்கு நம் வாழிட நாடுகள் குரல்கொடுக்க் வேண்டும் எனவும் பறைசாற்றியபடி


இப்போராட்டம் பல நெடும் தூரம் இன்னல்களோடு பயணித்து இக் கடும் குளிர் காலத்தில் தமிழர்கள் வீறு கொண்டு 26 வது தடவையாக பயணிக்கின்றார்கள் என்னும் உணர்வு பூர்வமான செயல் மிகவும் கூர்மையாக சர்வதேச மட்டத்தில் நோக்கப்படுகின்றது என்பதை உணரக்கூடியவாறு உள்ளது.




இன்றைய பயணம் 05/03/2023 சுவிசு லெளசான் மாநகரத்தில் அகவணக்கத்தோடு ஆரம்பித்த இப்போராட்டம் இன்று பி.ப 17.00 மணிக்கு ஐ.நா சமையின் முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது 06/03/2023 நாளை நடைபெறும் மிகப் பெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு எமக்கு கிடைக்கப் படவேண்டிய நீதியினை ஐ.நாவின் செவிப்பறைகள் முழங்க பறைசாற்ற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே காலம் எமக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து உறவுகளும் உங்கள் வரலாற்றுக் கடமையினை ஆற்றி தமிழீழ மண்ணை மீட்க நடைபெறும் அறவழிப்போராட்டத்தில் பங்குகொள்ள வாருங்கள் 06/03/2023 நாளை பி.ப 2.00மணியளவில்.
“அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது”
- தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”