சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன்
உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு
அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவெழுச்சி நாளானது 07.02.2023 செவ்வாய் அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் அமைந்துள்ள கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.

மேலும்

பிரான்சில் தாயக விடுதலைப் பாடகியின் கண்ணீர் வணக்க நிகழ்வு!

தாயகப் பாடல்களால் விடுதலைக்கு உணர்வூட்டி தேனென ஒலித்த கானக்குயில் ஒன்று ஓய்ந்து போனது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்து உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார்.

மேலும்

வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய எழுச்சிப் பேரணி
மடக்களப்பு பிரகடனம் 07 பெப்ரவரி 2023

இன்று 2023 பெப்ரவரி 7 ம் திகதி, தமிழ் மாணவர்களும் மக்கள் சமூக அமைப்புக்களும்,தமிழ் மக்களுமாக ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம்,தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப்பிரகடனப்படுத்துகின்றோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ்பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறைவெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியநிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை எமது ஏகோபித்தவெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இன்றுபேரெழுச்சியாக எமது தாயகத்தின் தென் பகுதியாகிய மட்டக்களப்பு நகரில்ஒன்றுதிரண்டுள்ளோம். தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன்,தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர்.

மேலும்