மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்! 17ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 25.12.2005 அன்று மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள சென் மேரி தேவாலயத்தில் நத்தார் ஆராதனைகளில் கலந்துகொண்டிருந்த போது சிறிலங்கா பௌத்த சிங்கள அரச பயங்கரவாதத்தின் துணைக்குழுவாக இயங்கிய கருணா – பிள்ளையான் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டதன் 17வது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.