நேற்று முன்தினம் பாராளுமன்ற வரவுசெலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில்இ அமைச்சர்களுக்குக் கீழே இருக்கக்கூடிய விவாதங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன தற்போது இருக்கக்கூடிய மாவட்ட, மாகாண சபைகளைத்தாண்டி மாவட்ட மட்டத்திலே அதிகாரங்களைப் பரவலாக்கி, மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றபோது, செலவுகளைக் குறைக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவ்வேளை சபையிலிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தான் மீண்டும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்ற கருத்தை ஆணித்தரமாகக் கூறியிருந்தார். அவர் கூறிய விடயம் ஊடகங்கள் ஊடாகவும் காணொளி ஊடாகவும் நிரூபணமாகியிருக்கின்றது. மாகாண சபைகளை நிராகரித்துஇ மாகாண மட்டத்திற்குரிய அதிகாரங்களை நிராகரித்து அதை மாவட்ட மட்டத்திற்குள்ளான, மாவட்ட அபிவிருத்தி சபைகளை தான் கொண்டு வரப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் அலுவலகமானது ஊடகங்கள் தனது கருத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டிருக்கின்றன…
மேலும்