தமிழ்க்குலம் செய்ததவமே தலைவன் எங்கள் வரமே

0 0
Read Time:1 Minute, 39 Second

பொழுதுகளின் புன்னகையில்
அண்ணன்முகம்-காலைப்
பூக்களின் மலர்வில் அண்ணன் முகம்
எழுகின்ற பரிதியே அண்ணன் உரு-மாலைக்
கருக்கலின்செவ்வானம் அண்ணன் உரு

இரவின் கருமையே
அண்ணன் திடம் – குளிர்
நிலவுதரும் வெள்ளொளியே அண்ணன்குணம்
கடல்ஆழம் எப்போதும் அண்ணன்மனம் -அங்கு விளைகின்ற முத்துகள் அண்ணன் கனம்

கலங்கரை ஒளியாகும்
அண்ணன் விழி
அலைதொடும் கரையாகும் அண்ணன் மொழி
தரைமணலே தடம்காட்டும் அண்ணன்வழி
தாயகத்தின் திசையெங்கும்அண்ணன் ஒலி
தமிழ்பாடும்இசையிலெல்லாம் அண்ணன்கரு தமிழ்வாழும் நல்லுலகில் அண்ணன்திரு

கானகத்தின் அடர்வினிலே அண்ணன் உரம்
கதிர்தள்ளும்வயல்களிலும்
அண்ணன் நிலம்

கரும்பனை நிமிர்வினிலேஅண்ணன் திறம்
காற்றாடும் தென்னைகளோ அண்ணன்கரம்
அரவணைக்கும் பறவையதில்
அண்ணன்தாய்
அன்புதேடும் கன்றுகளில்
அண்ணன்சேய்

பொழிகின்ற மழைநீரில் அண்ணன்கொடை
திமிர்கின்ற மலைகளிலே அண்ணன் படை
பாய்ந்தோடும் ஆறுசொல்லும்அண்ணன் நடை
பரமசிவன் வடிவம் என்ன?
அண்ணனே விடை
நல்லறம் செயல்மறம் அண்ணன்அகம்
தமிழ்க்குலம் செய்த தவம்
அண்ணன்வரம்.
வாழ்க அண்ணன் பல்லாண்டு பல்லாண்டு.

கலைமகள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment