சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவெழுச்சி நாள்.
தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாய்க் கொண்டு வாழ்ந்து, ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 05.09.2022 அன்று மாலை 18:00 மணியளவில் அவர் ஈகைச்சாவினைத் தழுவிய ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நினைவுகூரப்பட்டது.
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் நினைவெழுச்சி நாளில் ஈகைப்பேரொளி செந்தில்குமரன், தமிழின விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த அனைத்து ஈகியர்கள் ஆகியோருக்கான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு






