பிரான்சில் இடம்பெற்ற 17 மனிதநேயப் பணியாளர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 மனித நேயப் பணியாளர்களின் 16 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (04.08.2022) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப் பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

மேலும்

தமிழீழத்தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனம்,04.08.1987

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.இதன் விளைவுகள் எமக்கு சாதகமாக அமையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசரஅவசரமாக அமுலாக்கப்பட்டுவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மேலும்

வல்லைப் படுகொலையின் 33வது ஆண்டு நினைவேந்தல்!

02.08.1989அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறையில் வைத்து கொலை செய்யப்பட்ட 63 தமிழர்களின் 33வது வருட நினைவேந்தல் இன்று மாலை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் நினைவுகூரப்பட்டது.

மேலும்

ஊடகவியலாளர் நிலக்சன் நினைவேந்தல்

01.08.2007அன்று யாழில் வைத்து சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், யாழ் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

மேலும்