27.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித் தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது.
( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்கி அதன் பின்னர் அணிகளை ஒன்றாக்கி அதே போல காவலரனையோ முகாமையோ மாதிரி செய்து கடுமையான வேகமான பயிற்சிகள் முடித்து தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு அதன் பின்பே தாக்குதல் நடக்கும். )

அந்த நேரத்தில் வேவு பார்த்து தாக்குதல் நடத்துவதென்பது இலகுவானதொன்றல்ல. மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூடச் செல்லலாம் அதுவும் ஒரு தளபதியின் வீரச்சாவுக்குப் பழிவாங்குவதென்பதென்றால் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்டளவு படையினரைக் கொல்லவேண்டும். இவையிரண்டும் இல்லாவிடில் அது பழிவாங்குத் தாக்குதல் ஆகாது.

அதுவும் பல்வேறு சமர்க்களங்களில் பங்குபற்றிய ஒருவீரன் கிட்டண்ணா யாழ்மாவட்டத் தளபதியாகவிருந்த காலத்திலிருந்து பல் வேறு சமரக்களங்களில் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன்.

பல் வேறு இடங்களில் பல்வேறு களங்களை வழிநாடாத்திய ஒரு தளபதியின் வீரச்சாவிற்கு பழிவாங்குவதென்றால். அதுவும் ஒரு நாளுக்குள் இச் சமர் இடம்பெற்றது. வேவு பார்க்கத் தொடங்கிய குறிப்பிட்ட நாட்களுக்குள் அவ் வேவுத்தகவல்களின் அடிப்படையில் இத்தளபதியின் வீரச்சாவிற்குப் பதிலடியாக ஒரு தாக்குதல் நடாத்துவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது.

அதுதான் வெற்றிலைக்கேணி பெரிய மண்டலாய். வழமையான பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் அவசரஅவசரமாக இயக்கச்சியில் ஒன்றாக்கப்பட்டு தாக்குதல் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் தளபதி சொர்ணம் அவர்களால் போரளிகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது அணிகளுடன் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு மிக அண்மையில் வந்து காவலரன் களையும் காட்டி தாக்குதலையும் வழிநடாத்தினார்.

தளபதி ராஜன் அவர்கள் வீரச்சாவடைந்து இருபத்திநான்குமணிநேரத்தில் அதாவது 28.08.1992ல் இடம் பெற்ற இப் பழிவாங்கு வெற்றிகரத்தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
எழுத்துருவாக்கம்….சு.குணா.
