பிரான்சில் தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைய இளையோர்கள் ஆர்வம்!

0 0
Read Time:4 Minute, 28 Second

பிரான்சில் தமிழ்ச்சோலைகளின் தேர்வர்களாகவும் தனித்தேர்வர்களாகவும் *வளர்தமிழ் 12 நிறைவுசெய்த இளந்தலைமுறையினரை * தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டு விளக்க ஒன்றுகூடல் கடந்த 04.06.2022 சனிக்கிழமை  அன்று பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு மண்டபத்தில் தேர்வின் நிறைவின் போது இடம்பெற்றது.

இளந்தலைமுறையினர் *எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய தேசியக் கடமைகள் மற்றும் கற்கைநெறி தொடர்பான விளக்கங்கள் * இந்த ஒன்றுகூடலில் வழங்கப்பட்டன.இளந்தலைமுறையினர் தமிழ்ச்சங்கங்களில் பொறுப்புக்களைப் பெற்று இயங்குவதனூடாக தமிழ்த்தேசிய அரசியலில் பிரெஞ்சு நகரசபை மட்டத்திலும் கிடைக்கக்கூடிய பரஸ்பர அனுகூலங்கள் பற்றியும்,  தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொள்ளும் சமூக, பொருண்மிய, தகைமைசார் நன்மைகள் தொடர்பாக *கொலம்பஸ் தமிழ்ச்சங்கத்தின் இளந்தலைமுறைத் தலைவர் நிதிபன் * அவர்கள் விரிவான விளக்கத்தை வழங்கியிருந்தார்.*வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்கள் தமிழ்ச்சோலைகளில் தமிழாசிரியர்களாக கடமையாற்றுவது தொடர்பாகவும் அதனால் தமிழ்மொழிக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் முன்னேற்றங்கள் தொடர்பாக*, கடந்த 4 ஆண்டுகளாக தமிழாசிரியையாக கடமையாற்றுபவரும் தமிழியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவருமாகிய இளந்தலைமுறை *தமிழாசிரியை செல்வி நேதிரா இந்திரஜித்* விளக்கியிருந்தார்.தமிழை இரண்டாம் மொழியாகக் கற்று வெளியேறும் இளையோருக்கு   *தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு* (BA) தொடர்பாக, அப்பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் *செல்விகள் லிஷானி மனோகரன், மீனாட்சி ஜெயக்குமார் * ஆகியோர் வழங்கியிருந்தனர். 
*பட்டநெறியை கற்பதால் பிரான்சில் மேற்கொள்ளக்கூடிய பட்டமேற்படிப்புகள்* மற்றும் தொழில்சார் அனுகூலங்களை பற்றி விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இளையோர் அமைப்புகளில் இணைந்து பணியாற்ற இளையோருக்கு அழைப்பு விடுத்த இளந் தலைமுறை ஆசிரியரும் பட்டகருமான *செல்வன்  தவராசா சஞ்சித்*, அதனால் *பிரஞ்சு அரசமட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கு பற்றியும்* விளக்கியிருந்தார்.முழுவதும் இளையோரால் வழங்கப்பட்ட விளக்கங்களை தேர்வர்கள் உற்சாகமாகக் கேட்டறிந்ததோடு ஐயங்களையும் கேட்டு தெளிவுபெற்றனர்.  தமிழ் மொழிக்கும் இனத்திற்குமான தொடர்ச்சியான பங்களிப்பிற்கும் தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் பெரும்பாலான மாணவர்கள் உறுதிமொழிகளை வழங்கிச்சென்றனர்.
*‘’இளையோரிடம் கையளித்தல்’’* எனும் தேசியத் தலைவரின் கோட்பாட்டிற்கிணங்க தேசிய நீரோட்டத்தில் இளையோரை இணைக்கும் இந்நிகழ்வு ஒரு பெரும்பாய்ச்சலாகக் கருதமுடியும்.இதேவேளை *புதிதாக தமிழியல் பட்டப்படிப்பில் (BA) * இணைவோருக்கான *வரவேற்பு நிகழ்வொன்று எதிர்வரும்  19.06.2022*ஞாயிறு அன்று *மாலை 15.00* மணியளவில் *தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக கேட்போர்கூடத்தில் * நடைபெறவுள்ளதாகத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment