கடந்த தேர்தலில் ஏற்பட்ட பாரிய அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ, ரணிலுக்குக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இதுதான்.
ஆதலால் அவர் எல்லோரையும் அணுகுவார்.
இப்போது இவர் பெறும் உதவிகள், இந்தியா-சீனா போன்ற நாடுகள் தற்போது வழங்கிவரும் குறுங்காலக் கடனுதவிகளின் தொடர்ச்சியே.
இவரால் தற்காலிக default இலிருந்து மீள முடியுமா?.
$51 பில்லியன் வெளிநாட்டுக்கடனிற்கு என்ன நடக்கும்?.
இதிலுள்ள $35பில்லியன் Bond முதலீட்டாளர்களுக்கு என்ன தீர்வினைச் சொல்லப் போகிறார் பிரதமர் ரணில்?.
சீனா-ஜப்பானிலிருந்து பெற்ற $12 பில்லியன் வெளிக்கடன் என்னாவது?.
2009 இலிருந்து FDI என்கிற வெளிநாட்டு நேரடி முதலீடு negative.
Default என்ற label ஐ அகற்றாமல் FDI வருமா?.
வரி வருவாயை அதிகரிக்காவிட்டால் மீண்டும் பணத்தை அச்சடிப்பதைத் தவிர வேறு வழியில்லையென எச்சரிக்கிறார் மத்திய வங்கி தலைவர் நந்தலால் வீரசிங்க.
அச்சடித்தால் பணவீக்கம் அதிகரிக்கும்.
Inflation அதிகரித்தால் மத்திய வங்கி தனது வட்டிவீதத்தை கூட்டும்.
அது வங்கியில் கடன் பெறும் உற்பத்தியாளரைப் பாதிக்கும்.
ஆகவே பிரதமர் ரணில், உலக நிதிச் சந்தையை மீண்டும் அணுக வேண்டுமாயின் Default (முறிவுநிலை) நிலையிலிருந்து வெளியே வர வேண்டும்.
அதுவரை எண்ணெய், எரிவாயு, மருந்து, உணவுப்பொருட்கள் மற்றும் உரங்களை வாங்க வல்லரசுகள் உதவி செய்யும்.
இவர் பிரதமராக வர முன்னரும் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள்.
அலி சப்றியின் இடத்தை ரணில் நிரப்பியுள்ளார்.
இலங்கையின் Default label ஐ முதலில் இவர் இறக்கட்டும்.
அதுவரை இவரையொரு மீட்பராகச் சித்தரிக்கும் போக்கினை தவிர்ப்பது உத்தமம்.😀
- இதயச்சந்திரன்