Read Time:49 Second
தமிழினப் படுகொலைக் கஞ்சி இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் வழங்கப்பட்டது.
”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தமிழினப் படுகொலை ஆவணங்கள் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்கு முன்னால் இன்று இரண்டாவது நாளாகவும் காட்சிப்படுத்தப்பட்டது.
அந்த நினைவுமுற்றத்தின் முன்னால் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தமிழினப் படுகொலையின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.