ஞானலிங்கேச்சுரத்தில் வலிசுமந்த நினைவு வணக்க வழிபாடு
வெள்ளி 13. 05. 2022 / 19.15 மணிமுதல்
முள்ளிவாய்க்கால் கஞ்சி அருளமுதாக வழங்கப்படும்
அன்புடையீர் வணக்கம்
தமிழினம் பெருவலிசுமந்த இருள் நாள் மே 18 ஈராயிரத்து ஒன்பது காலப்பகுதி ஆகும். இக்காலப் பேரிடரை, பூவாக, பிஞ்சாக, காயாக, கனியாக விதையானவர் நினைவினை உலகம் உள்ளவரை கடத்திச் செல்வதுடன் மட்டும் தமிழர்கள் கடமை நிறைந்ததாக எண்ணிவிடலாகாது.
தமிழர் அறத்தை வெல்லவைக்கும் பொறுப்பும் அனைத்து தமிழர்களுக்கும் உரியதாகும். இன அழிப்பாளர்கள் இன்றும் மேற்கொள்ளும் உளவியல் போரையும் தமிழர்கள் வெல்லவேண்டும்.
“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்”
எனும் தேசத் தலைமகன் சொற்பொருள், மாண்டவர்கள் உயிரை நினைவில் ஏந்தி, இனத்திற்குள் சிறுமைகள் செய்யும் பிரிவுகள் ஒழிந்து, உலகில் தமிழர்கள் ஓர் கூரையில் அறிவுடன் அறப்போரை ஒன்றுமையுடன் நடாத்த்தி வெல்ல வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
