பின்லாந்து நாட்டின் தெற்காசியாவிற்கான தூதுவர் திரு. ஹன்னு ரிப்பட்டி னுக்கும் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது யாழ் மாநகர முதல்வர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய இனப்படுகொலைக்கு ஒரு நீதியான ஒரு தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கோரியிருந்தார்.

மேலும்

வலிசுமந்த மாதத்தின் விழிநிமிர்வுடன் “ஈழப்படுகொலையின் சுவடுகள்- 2009” பாகம் 01. நூல் வெளியீடு.

உலகவல்லாதிக்க நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவோடு,தமிழர் தாயக தேசத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு சுதந்திரத்திற்காய் எழுந்த குரல்கள் பயங்கரவாதம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் சிறுமைப்படுத்தி மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்01 ’ கட்டுரைத் தொகுப்பு நூல் எதிர்வரும் 14.05.2022 சனிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் கலரி மண்டபத்தில் நிதர்சனம் நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது.

மேலும்

தலைமுறையின் விடுதலைக்காகத் தன்னையே
ஈந்த லெப்.கேணல் அன்பழகன்/விமலன்! 13வது ஆண்டு நினைவு 05,05. 2022

ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட மண் ஆகும்.

மேலும்

ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு நிதியா அல்லது நீதியா?.

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை மக்களுக்கென நிதி ஒதுக்கீடு செய்து உதவி செய்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். அதே சமயத்தில் இப்படி ஒரு சூழல் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கைத்தீவின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அனைத்துத் கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும்