Read Time:42 Second
இந்தியப்படைகள் ஈழத்தில் நடாத்திய தமிழினப் படுகொலையை நிறுத்துமாறு கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதி அவர்களின் 34வது வருட நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஸ், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.