எம்ஜிஆர் என்கிற ஒரு ஆளுமை உலக புகழ் பெற்றிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய அரசியல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அதில் மக்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட விடயம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை அவர் கையாண்ட விதம். எமக்கு என்ன தேவை என்பதை முழுமையாக உணர்ந்து இருந்தார். அது ஈழ மக்கள் மத்தியிலும், உலக தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பினை பெற்று தந்தது எம்ஜியார் அவர்களுக்கு……
மேலும்Day: April 1, 2022
சுவிசில் மீண்டும் தளர்வு
பெருந்தொற்றுப் பேரிடாராக சுவிற்சர்லாந்து அரசால் நோக்கப்பட்டிருந்த மகுடநுண்ணிப் பெருந்தொற்று தற்போது சுவிஸ் அரசால் தொற்றுநோயாக மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் பொருளை சுக் மாநில அரச அதிபர் தெரிவித்த உவமையுடன் பார்த்தால், ஆம், மகுடநுண்ணி இன்னும் உலகில் முற்றும் முழுதாக ஒழியவில்லை, அப்படி ஒழியாதும் போகலாம், ஆனால் சுவிற்சர்லாந்து நலவாழ்வு நிறுவனங்களால், மருத்துவமனைகளால் இத்தொற்றுக்குள்ளானவர்களுக்கு மருத்துவம் அளிக்கமுடியும், தடுப்பூசி இடப்பட்ட பயன் இந்நோய்த்தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும், ஆகவே பேரிடர் பெருந்தொற்றிலிருந்து மகுடநுண்ணி (கோவிட்-19) தொற்றுநோயாக மட்டும் பார்க்கப்படும்.
மேலும்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் பொலீசாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்குக் அனைவரும் அணிதிரள வேண்டும்.
சிறிலங்காவின் ஆயுதப்படைகளாலும் துணை இராணுவக் குழுக்களலும் பல ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.குறிப்பாக 2009 மே மாதம் இனவழிப்பு யுத்தத்தின் முடிவில் – சிறிலங்கா ஆயுதப்படைகளிடம் சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
மேலும்