பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகின!

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 நேற்று (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை parc interdépartemental des sports paris val de marneChemin des bœufs94000 Creteil. மைதானத்தில் ஆரம்பமானது.

மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மீதான பொலிஸாரின் தாக்குதலிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

“பொலீசாரினதும் அரச கட்சியினதும் அராஜகத்தை அனுமதிக்க முடியாது!”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்…இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது…இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.

மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.

கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும், தமிழீழமே தீர்வு எனவும் முக்கிய அரசியல் மையங்களில் வலியுறுத்தியபடி 7 நாடுகளை கடந்து ஐ.நா முன்றலை 1500Km பயணித்து இன்று 06/03/2022 எழுச்சிகரமாக வந்தடைந்தது.

மேலும்