தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 12 வது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்.

0 0
Read Time:1 Minute, 42 Second

27.02.2002 இன்று ஆரம்பித்த ஈருருளிப்பயணம் Baden என்னும் மாநகரத்தில் நிறைவுற்றது. பயணித்த வழியில் Karlsuher மாநகரத்தில் தமிழ் மக்களின் வரவேற்போடு தொடர்ந்தும் இலக்கு நோக்கி பயணித்தது. யேர்மனி நாட்டு பெண் ஒருவரினால் நீர் ஆகாரம் பகிர்ந்து தமிழர்களுக்கு நடந்த அழிப்புப் பற்றி கேட்டறிந்து தமிழீழத் தேசியக் கொடியினை விருப்போடு பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நாளை 28/02/2022 திங்கட் கிழமை யேர்மன் நாட்டின் Kehl – Strasbourg (பிரான்சு) எல்லையினை மதியம் 13 மணிக்கு வந்தடைகிறது.

மதியம் 14 மணிக்கு Strasbourg மாநகரசபை ஊடாக 15:30 மணிக்கு ஐரோப்பிய ஆலோசனை அவை (Parc orangeries) முன்றலில் நடைபெற இருக்கும் கவனயீர்பு போராட்டத்தில் இணைய இருக்கின்றது.

பிரான்சு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தம் வரலாற்றுக்கடமை உணர்ந்து நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவும்.

« விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும் »

  • தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment