கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம், இன்று 19/02/2022 Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை வந்தடைந்தது. வரும் வழியில் கடும் புயற்காற்றின் சீற்றத்திலும் இயற்கையின் பெரும் சவால்களுக்கு மத்தியில் பயணித்து 70Km தொலைவினைக்கடந்து இலக்கு நோக்கி அயராது பயணிக்கின்றது.
மேலும்Day: February 19, 2022
சுவிசில் 17. 02. 2022 முதல் புதிய தளர்வுகள்
கடந்த 17.02.2022 முதல் சுவிற்சர்லாந்து அரசு மகுடநுண்ணித் தொற்றினைத் தடுப்பதற்கு அறிவித்திருந்த பெரும்பாலான நடவடிக்கைகளை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டின் அதிபர் திரு. இக்னாச்சியோ காசிஸ் இவ்வாறு ஊடக சந்திப்பில் சுவிஸ் அரசின் தளர்வுகளை அறிவித்தார் «பெருந்தொற்று பெருக்கம் குறைவடைந்து வருகின்ற நற்சூழல் அமைந்துள்ளது, தொடுவானத்தில் ஒளி ஒளிர்கின்றது».
மேலும்