“யாழ் மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு இடம்பெற உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பது என்பது நமது கரங்களை எடுத்து நாமே நமது கண்களை குத்திக் கொள்வதற்கு இணையானது!
இந்த விடயத்தின் மூலம் யாழ் மேயர் திரு.மணிவண்ணன் அவர்களை வெளியேற்றி விடலாம் என எண்ணம் கொண்டு சிலர் நிற்பதானது ஏற்கமுடியாத விடயமே! பயன்தரும் விடயங்களில் தமிழர்களே தமிழர்களை தோற்கடிக்க நினைப்பதும் முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போட முயல்வதும் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது! இம்முறை இந்த பாதீடுதோற்கடிக்கப்படுமானால் திரு.வி.மணிவண்ணன் அவர்களுடைய அதிகாரங்கள் பறிக்கப்படும் நிலை ஏற்படும். தமிழ்த்தேசியத்தின் பாதையில் நின்று உண்மையும் நேர்மையுமாக உழைத்துக் கொண்டு இருக்கும் யாழ் மேயர் திரு.வி.மணிவண்ணன் அவர்களுடைய அதிகாரங்கள் பறிக்கப்படுவது தமிழ்த்தேசிய அரசியல் ஒற்றுமைக்கும் பல எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கும் பாரிய ஏமாற்றத்துக்கு வழிவகுக்கும். தன்னுடைய இளம் வயதிலேயே ஆளுமைத்தன்மையுடன் எதிர்காலத்தலைமுறையில் அக்கறை கொண்டு பல உன்னதமான ஆக்கபூர்வமான செயற்திட்டங்களையும் மாநகரசபை அதிகாரங்களைக்கொண்டு நிகழ்த்திக் காட்டியவர் திரு.வி.மணிவண்ணன் அவர்கள் தயவுசெய்து பதவியில் இருக்கும் யாழ்.மாநகர மேயர் திரு.வி.மணிவண்ணன் அவர்களது செயற்பாட்டிற்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் என பணிவோடு வேண்டுகோள் வைக்கும் அதேவேளை இந்த கோரிக்கைக்கு மாநகரசபை உறுப்பினர்களும் செவி சாய்க்க வேண்டும் என பணிவோடு மறத்தமிழர் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
வேலப்பு அன்பழகன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
மறத்தமிழர் கட்சி.”