யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிர்வாகி வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது .
இன்று மாலை 5.30 மணிக்கு யாழ் மாநகர முதல்வரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.






இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும்,சிறப்பு விருந்தினர்களாக தியாகந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் கலந்து கொண்டதுடன் ,மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.



இதன்போது ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும்வகையில் நினைவுக்கல் மூன்று மொழிகளிலும் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆரியகுளம் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துரு திறக்கப்பட்டு,ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது.












ஆரியகுளத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை தன் செலவில் முன்னெடுத்த தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் வாமதேவா தியாகேந்திரனுக்கு அறக்கொடை அரசன் எனும் நாமம் சூட்டி மாநகர சபையால் மதிப்பளிக்கப்பட்டது.







இந்நிகழ்வில் வாண வேடிக்கைகள், தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.