உய்ய நெருக்கடிநிலை கடந்த 24.11.21 அன்று 24 மணிநேரத்திற்குள் 8585 மகுடநண்ணித் தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுவிஸ் அரசு இதனை உய்ய நெருக்கடி நிலையாகப் நோக்குகின்றது. இருந்தபோதும் இவ் ஊடக சந்திப்பில் கடந்த காலங்களைப்போன்று புதிய முடக்கங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சுவிற்சர்லாந்து அரசால் ஆணைவழங்கப்பட்ட துறைசார் அறிஞர்குழு 23. 11. 21 நடாத்தியிருந்த ஊடக சந்திப்பில் அவுஸ்திரியா நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சுவிசும் எதிர்கொள்வதாக தெரிவித்திருந்தது. தற்போது அவுஸ்திரயாவும் யேர்மனியில் பாதிக்கப்பட்ட இடங்களும் முடக்க நடவடிக்கையினை கடைப்பிடிக்கின்றார்கள்.
மேலும்Day: November 25, 2021
சுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநில அரசின் பல்சமய வரைபடம் வெளியீடு
சுவிஸ்நாட்டின் ஆட்சித்தலைமை அமைந்திருக்கும் பேர்ன் மாநிலம் தமது மண்ணில் உள்ள அனைத்து வழிபாட்டு இடங்களையும், சமயங்களையும் இணையத்தில் எண்ணியல் (டிஜிட்டல்) வரைபடமாக வெளியிட்டுள்ளது. பேர்ன் மாநில அரசு கடந்த ஆண்டு 2020ல் இத்திடட்தினை உருவாக்கியபோது இந்து சைவத்திருக்கோவில்களின் ஒன்றயம் சுவிற்சர்லாந்து மற்றும் சைவநெறிக்கூடம் இணைந்து பணியாற்றி பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள கோவில்களை பட்டியலிட்டு அவர்களது செற்பாட்டுப் பணிகள் தொடர்பில் அறிக்கை உருவாக்கி அளித்திருந்தது.
மேலும்