பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14-ம் ஆண்டு நினைவேந்தல்!

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் இன்று (01.11.2019 ) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது.

மேலும்

பிரான்சில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு-2021

இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப்.மாலதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரகாவியமான மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவ்றி சூர்சென் பகுதியில் இன்று (31.10.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியாக இடம்பெற்றது.

மேலும்

தடைகள் தகரும் தமிழீழம் மலரும் நூல் வெளியீட்டு நிகழ்வு

போராளிகள் கட்டமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சி.செ.புலிக்குட்டி எழுதிய தடைகள் தகரும் தமிழீழம் மலரும் என்கின்ற நூல் வெளியிட்டு நிகழ்வு 31.10.2021 இன்று முன்னாள் போராளி அகிலரூபன் தலைமயில் ஆரம்பமானது.

மேலும்