1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து
தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான்.
தொடர்ந்து கடற்புலிகளால் தளபதி அருச்சுனா அவர்களின் தலைமையில் தரைத்தாக்குதலணி ஆரம்பிக்கப்பட்டபோது சிவாவும் அதில் ஒருவனாக இணைந்து அப்படையணியில் மிகவும் சிறந்து விளங்கினான். இவனது அனைத்துச் செயற்பாடுகளையும் கவனித்த தளபதி அருச்சுனா அவர்கள் இவனை சிறப்புத்தளபதி சூசை அவர்களின் மெய்ப்பாதுகாப்பாளனாகா அனுப்புகிறார். அங்கு இவனது செயற்பாடுகளின் நிமிர்த்தம் இவனை மேலதிக மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிக்காக அப்போதைய கடற்புலிகளின் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரிடம் அனுப்பினார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள்.அங்கு தொலைத் தொடர்புப்பயிற்சிகளை பெற்ற அதேசமயம் அனுபவப் பயிற்சிக்காக ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளிலும் தளபதி பிருந்தன் மாஸ்ரரின் அனுமதியுடன் சென்று வந்தான்.இப்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதேசமயம்
தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கமைவாக கப்பல்களின் செயற்பாடுகளின் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் கப்ப்லுக்கு அனுப்பப்பட்ட போராளிகளுள் ஒருவனாக சிவாவும் சென்றான்.
அங்கு நின்ற காலங்களில் தன்னை ஒவ்வொரு விடயங்களிலும் மென்மேலும் கற்றக்கொள்கிறான்.
அதன்பின் தமிழீழம் வந்த சிவா ஆழ்கடல் விநியோகப் படகுகளின் கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே செயற்படுகிறான்.தொடர்ந்து சண்டைப்படகுகளின் கட்டளை அதிகாரியாக விநியோகப்பாதுகாப்புச்சமர் மற்றும் வலிந்ததாக்குதலில் செவ்வனவேபங்காற்றினான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்திற்க்கான பாதுகாப்புச் சமரில் செவ்வனவே பங்குபற்றிய சிவா தொடர்ந்து சண்டைப்படகுகளின் முகாம் பொறுப்பாளனாகவும் சண்டைப் படகுகளின் தொகுதிக் கட்டளைஅதிகாரியாகவும் செயற்பட்டான் .உடல்பருமனாகா இருந்தாலும் எந்தப்பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.மற்றும் சகபோராளிகளுக்கும் தனது அனுபவங்ளை சொல்லிக்கொடுத்து அவர்களின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றினான்.அதுமட்டுமல்லாமல் இக்கட்டான பல்வேறு கடற்சமரை தனது அனுபவங்களினால்
எங்களுக்குச் சாதகமாக மாற்றியவன் சி.அதே போல தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற ஆழ்கடல் விநியோகத்திற்க்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த கடற்படையின் சுற்றுக்காவல் கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளை தொடருமாறு கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் ஒரு தாக்குதல் திட்டம்கொடுக்கப்பட்டது.அதற்கமைவாக 21.10.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் சுற்றுக்காவல் கலங்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவடைகிறான்.
பல்வேறு கடற்சமரில் முக்கிய பங்காற்றியவன்.
நீண்டகடலனுபவம் கொண்ட சிவா
எந்தவேலையாகிலும் திறம்படசெய்தவன்.
அனைத்துப் போராளிகளையும் அரவனைத்து செயற்பட்ட ஒருவீரன்.
மிகவும் நெருக்கடியான காலங்களிலும் முகாம் போராளிகளை மிகவும்கட்டுப்பாடாக வைத்திருந்தபோராளியுமாவார்.
எழுத்துருவாக்கம் .. சு .குணா.
மேஜர் சிவா
வீரச்சாவு..21.10.2001
வேலாயுதம் தயாபரன்
வீரப்பிறப்பு:
11.05.1974
குடத்தனை, யாழ்ப்பாணம்.