யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை. காவியமான 80 மாவீரர்களி​ன்28ம் ஆண்டு நினைவு.

0 0
Read Time:15 Minute, 52 Second

மண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலணியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர் நாளன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அணிவகுப்பு மரியாதையை முதன் முறையாக விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதியாக ஏற்றார் .

இனி எங்கள் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நீங்கள் இங்கேயே நின்று காடு சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுமாறு கூறினார். எதற்கும் நாங்கள் தலைவரிடம் சென்று மேலதிக தகவல்களை உங்களுக்குச் சொல்வதாகவும் கூறி புறப்பட்டார். அவர் சென்று நான்கு நாட்களின் பின் யாழ்மாவட்டத் தாக்குதலணியையும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியையும் உடனடியாக வெளிக்கிடுமாறும் பணிக்கப்பட்டது. அதற்கமைவாக அவ் அணிகள் புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. அங்கு அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பட்டது . அங்கே மிகக் கடுமையான வேகமான பயிற்சிகள் தொடர்ந்தன . 28.09.1993 அன்று இராணுவம் முன்னேறுவதாகவும் அதற்காக அணிகள் புறப்படுமாறு பணிக்கப்பட்டது. அதற்கமைவாக புறப்பட்ட அணிகள் பளையில் இறங்கினதும் அங்கு நின்ற போராளிகள் வந்த போராளிகளுக்கு களநிலவரங்களை விளங்கப்படுத்தியதும், வந்த போராளிகளுக்கு அப்போது தான் விளங்கியது. இது ஒரு பாரிய நகர்வென்று. ஆகவே அப்பாரிய நடவடிக்கைக்கு எதிரான மறிப்புத்தாக்குதலை அங்கு நின்ற அணிகளுடன் இவ் அணிகள் தொடுத்தனர். மாலையாகியதும் எதிரி நகர்வை நிறுத்தினான். அணிகள் தற்காலிக அரண்ணமைத்துக் கொண்டிருக்க தளபதி பால்ராஜ் அவர்கள் கதைப்பதற்காக அணிகளை பின்னே வருமாறும் அதற்கமைவாக வேவு அணிகள் அவ்விடங்களுக்கு வந்தது. அணிகள் பின்னே வந்து நின்றன தளபதி பால்ராஜ் அவர்கள் 29.09.1993 அன்று அதிகாலையில் வந்து தாக்குதல் பற்றி கதைத்து விட்டு மன்னார் மாவட்ட தாக்குதலணியுடன் நின்று அவர்களுக்கு உதவுமாறும் கூறிவிட்டுச் சென்றார். அவரின் திட்டப்படி இராணுவத்தின் நகர்வு கிளாளியை நோக்கி இருப்பதாகவும், முன்னேறும் படையினரை முன்பக்கமாக தாக்கும் வேளையில் சிலவேளை பக்கப்பாட்டாக நகர்ந்தால் அதற்கேற்ற வகையில் உங்களுடைய தாக்குதல்கள் நீங்கள் எடுத்துக் கொண்டிருந்த பயிற்சிகளுக்கு ஏற்ற மாதிரி மிக வேகமானதாக இருக்க வேண்டுமெனக்
கூறினார்.

அதற்கமைவாக அனைத்து அணிகளும் தத்தமக்குரிய நிலைகளில் இருந்தன. இதனை சற்றும் எதிர்பார்க்காமல் முதல் நாள் மாதிரி இன்றும் தாங்கள்( 29.09.1993.) பெரிய எதிர்ப்பில்லாமல் இடங்களைப் பிடிக்கலாம் என்ற கனவுடன் பாரிய எறிகணைத் தாக்குதல் நடாத்தியவாறு வந்த படையினர் மீது பாரிய தாக்குதலை அதுவும் மிகக் கிட்டிய தூரத்தில் நடாத்தினர். அத்தோடு கடும் பயிற்சியிலிருந்த போராளிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஒட்டமெடுத்த படையினர் மீது கலைத்து கலைத்து தாக்குதல் நடாத்தினர். படையினர் அவர்களது புல்லட் புறூவ் ஜக்கற்றை கழற்றி எறிந்து ஓடியவர்களும் சப்பாத்துக்களை ஆயுதங்களை எறிந்துவிட்டு ஓடியவர்களுமாக ஓட்டமெடுத்தனர். இச்சமரில் ஒரு ராங்கியை ராங்கி எதிர்ப்புப் பிரிவினர் தாக்கி செயலிழக்கச் செய்தனர். அவ் ராங்கியைக் கூட விட்டுவிட்டு ஓட்டமெடுத்தனர். இதை வைத்தே எப்படி அடி என்று தெரியும். இச்சண்டையில் விடுதலைப்புலிகளிடம் கனரக ஆயுத பலமோ மோட்டார் பலமோ இருக்கவில்லை. அவர்களிடம் இருந்ததோ ஒரேயொரு பலம் அது தான் மனோபலம். இச் சமர் என்பது யாழ் மாவட்ட அணிகள், மன்னார் மாவட்ட அணிகள், வன்னி மாவட்ட அணிகள், மணலாறு மாவட்ட அணிகள் மகளீர் அணிகள், கடற்புலிகளின் அணிகள், படைத்துறைச் செயலக அணிகள், இம்ரான் பாண்டியன் படையணி, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி,அரசியற்துறை அணிகள் மற்றும் சிறப்பு வேவுப் பிரிவு ஆகிய அணிகள் இச்சமரில் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகவும் சிறப்பாகச் செய்தன. இவ் வெற்றிகர முறியடிப்புச் சமரை விடுதபை் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்தினார். பால்ராஜ் அவர்கள் பாரிய விழுப்புண்ணடைந்ததும் மூத்த தளபதி பொட்டு அவர்கள் தொடர்ந்து களமுனையை வழிநடாத்தினார். இச் சமரில் ராங்கியில் இருந்த ஜம்பது கலிபர் ஆயுதத்தை கழற்றச் சென்ற மேஜர் பிறேம்நாத் அவர்கள் வீரச்சாவடைந்தர். (1993 ஆண்டு முதன் முதலாக இயக்கத்தில் கனரக ஆயுதப்பிரிவு உருவாக்கப்பட்டது அதன் பொறுப்பாளராக மேஜர் பிறேம்நாத் அவர்கள் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.) இவ் வெற்றிகர முறியடிப்பச் சமரில் லெப் கேணல் நரேஸ் அவர்கள் உட்பட எண்பத்தி நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர். இத் தாக்குதலுக்கு பழி தீர்க்குமுகமாக இலங்கை விமானப் படையினர் சங்கத்தானை மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல் நடாத்தி தனது பழியைத் தீர்த்துக் கொண்டது.

எழுத்துருவாக்கம்….சு.குணா.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் கிளிநொச்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நரேஸ் உட்பட 80 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

அவர்களின் விபரம் வருமாறு,

1.லெப்.கேணல் நாயகன் (நரேஸ்) (சிங்கராசா அருள்நாயகம் – முல்லைத்தீவு)

2.மேஜர் துஸ்யந்தன் (தர்மலிங்கம் ஜெயக்குமார் – முல்லைத்தீவு)

3.மேஜர் உதயகுமார் (கிச்சான்) (சீமான்பிள்ளை கிறிஸ்ரி – மன்னார்)

4.மேஜர் செந்தில் (அந்தோனிப்பிள்ளை பத்மநாதன் – மன்னார்)

5.மேஜர் செல்வம் (சோமு முருகேஸ் – மன்னார்)

6.மேஜர் யாழிசை (மனோ) (திருலோகசிங்கம் செல்வராணி – யாழ்ப்பாணம்)

7.மேஜர் சுகன்யா (நடராசா சுபாசினி – யாழ்ப்பாணம்)

8.மேஜர் செந்தூரன் (பிறேம்நாத்) (சிதம்பரப்பிள்ளை சிவரூபன் – யாழ்ப்பாணம்)

9.மேஜர் குமரன் (மணியம் சிறிசிவநாதன் – யாழ்ப்பாணம்)

10.கப்டன் நகுலன் (நாகமணி கேதீஸ்வரன் – மன்னார்)

11.கப்டன் உதயசீலன் (டென்சன்) (கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன் – மன்னார்)

12.கப்டன் பொன்னன் (சிறிகாந்தன்) (நாகலிங்கம் சுரேந்திரன் – மட்டக்களப்பு)

13.கப்டன் மருத்துவன் (லுக்காஸ்) (சாமுவேல் செல்வானந்தன் – மன்னார்)

14.கப்டன் கருணா (சர்மிளன்) (அருள்நேசன் கின்சிலி – மன்னார்)

15.கப்டன் கல்யாணி (தர்மலிங்கம் ரேணுகாதேவி – திருகோணமலை)

16.கப்டன் அன்பழகி (அபி) (சபாபதி இலட்சுமி – திருகோணமலை)

17.கப்டன் குயிலி (சுதா) (இராசேந்திரம் இன்பவதினி – மட்டக்களப்பு)

18.கப்டன் சேரன் (ஈசன்) (நடராஜா சர்வேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

19.கப்டன் பிரதீபன் (கந்தசாமி மகிந்தன் – யாழ்ப்பாணம்)

20.கப்டன் சுதர்சன் (செல்லத்துரை ஜெயசீலன் – திருகோணமலை)

21.கப்டன் சத்தியன் (சிவஞானம் ரமேஸ் – முல்லைத்தீவு)

22.கப்டன் தமிழ்மறவன் (கல்கத்) (ஆறுமுகம் காண்டீபன் – முல்லைத்தீவு)

23.கப்டன் முகிலன் (வினோ) (சூரியகாந்தி சதாசிவம் – வவுனியா)

24.கப்டன் கதிர் (கீதன்) (இராமையா பாஸ்கரன் – திருகோணமலை)

25.கப்டன் மோகனரூபன் (சாந்தன்) (தங்கவேல் ராதாமோகன் – யாழ்ப்பாணம்)

26.கப்டன் செந்தூரன் (புலோமின்) (மரியாம்பிள்ளை கமிலன் – மன்னார்)

27.கப்டன் செம்பிறை (சௌமி) (வல்லிபுரம் நளினி – வவுனியா)

28.கப்டன் வினோதன் (நாகலிங்கம் உதயகுமார் – கிளிநொச்சி)

29.லெப்டினன்ட் சசிதரன் (வேலாயுதம் மகேந்திரன் – வவுனியா)

30.லெப்டினன்ட் மகேந்திரன் (மகேஸ்) (கந்தப்பிள்ளை விஜிதரன் – முல்லைத்தீவு)

31.லெப்டினன்ட் சீலன் (சலீம்) (தர்மகுலசிங்கம் சுந்தரராஜன் – முல்லைத்தீவு)

32.லெப்டினன்ட் சங்கர் (கனகரத்தினம் கனகலிங்கம் – வவுனியா)

33.லெப்டினன்ட் ஒப்பிலாமணி (சிவராஜ்) (அந்தோனிப்பிள்ளை செல்லத்துரை – புத்தளம்)

34.லெப்டினன்ட் செல்வன் (கனகரட்ணம் ஜீவரட்ணம் – அவிசாவளை)

35.லெப்டினன்ட் கில்மன் (கிருஸ்ணசாமி சின்னவன் – கண்டி)

36.லெப்டினன்ட் விந்தன் (கந்தையா சிவரூபன் – முல்லைத்தீவு)

37.லெப்டினன்ட் சிவனேசன் (ஆறுமுகம் பிரதீபன் – முல்லைத்தீவு)

38.லெப்டினன்ட் சிவம் (செல்வம் ரவி – மட்டக்களப்பு)

39.லெப்டினன்ட் உமா (அந்தோனிப்பிள்ளை தேவமேகன் – வவுனியா)

40.லெப்டினன்ட் குமணன் (செல்வரட்ணம் குணரட்ணம் – மன்னார்)

41.லெப்டினன்ட் தம்பித்துரை (தாசன் அன்ரன் – மன்னார்)

42.லெப்டினன்ட் சிவன் (பாக்கியராஜா மங்களேஸ்வரன் – மன்னார்)

43.லெப்டினன்ட் சிவானந்தன் (அந்தோனி யூட் – மன்னார்)

44.லெப்டினன்ட் தாரகா (இராமசாமி சந்திரா – வவுனியா)

45.லெப்டினன்ட் கார்வண்ணன் (ரகுநாதன்) (குணரட்ணம் குணராஜ் – யாழ்ப்பாணம்)

46.லெப்டினன்ட் இளமுருகன் (ஐயாத்துரை அன்பழகன் – யாழ்ப்பாணம்)

47.லெப்டினன்ட் ஈகவரசன் (தியாகு) (இராசேந்திரன் யோகநாதன் – யாழ்ப்பாணம்)

48.லெப்டினன்ட் ஐயாத்துரை(நியூட்டன்) (வன்னியசிங்கம் விஜயகுமார் – யாழ்ப்பாணம்)

49.2ம் லெப்டினன்ட் சந்திரன் (அருளப்பு பிலிப்சாள்ஸ் – முல்லைத்தீவு)

50.2ம் லெப்டினன்ட் திருவள்ளுவன் (ரகீம்) (சுப்பிரமணியம் கணேசமூர்த்தி – வவுனியா)

51.2ம் லெப்டினன்ட் நவீனன் (செல்வராசா செல்வேஸ்வரன் – முல்லைத்தீவு)

52.2ம் லெப்டினன்ட் மதியழகன் (பசுபதிப்பிள்ளை தயாரஞ்சீதன் – வவுனியா)

53.2ம் லெப்டினன்ட் நம்பியாண்டான் (செல்லத்துரை பிரபாகரன் – வவுனியா)

54.2ம் லெப்டினன்ட் அரவிந்தன் (செந்தமிழ்) (வெற்றிவேல் ஞானசேகரம் – வவுனியா)

55.2ம் லெப்டினன்ட் களப்பாடி (செல்லத்துரை புனிதகுமார் – கிளிநொச்சி)

56.2ம் லெப்டினன்ட் நீதிதேவன் (ஆணுப்பிள்ளை ரகு – மன்னார்)

57.2ம் லெப்டினன்ட் வேல்விழி (அபிசா) (சூசைகுருஸ் லெனிஸ்கொலஸ்ரிக்கா – மன்னார்)

58.2ம் லெப்டினன்ட் செல்வம் (தனா) (கிறிஸ்.ரீன் செல்வராணி – யாழ்ப்பாணம்)

59.2ம் லெப்டினன்ட் சசி (சண்முகநாதன் வசந்தலாவேணி – கிளிநொச்சி)

60.2ம் லெப்டினன்ட் வாசுகி (குருசுமுத்து தேவதிரவியம் – கிளிநொச்சி)

61.2ம் லெப்டினன்ட் சீத்தாலட்சுமி (சுப்பன் முனியம்மா – முல்லைத்தீவு)

62.2ம் லெப்டினன்ட் காரணி (துரைச்சாமி லலிதாதேவி – மட்டக்களப்பு)

63.2ம் லெப்டினன்ட் மிதுலா (கணபதிப்பிள்ளை மாரிமுத்து – மட்டக்களப்பு)

64.2ம் லெப்டினன்ட் நரேந்தினி (அப்பாசாமி அன்னலட்சுமி – கிளிநொச்சி)
65.வீரவேங்கை வீரபாண்டியன் (கந்தசாமி இந்திரகுமார் – முல்லைத்தீவு)

66.வீரவேங்கை முருகவேல் (பெருமாள் கண்ணன் – கிளிநொச்சி)

67.வீரவேங்கை சுரேஸ்குமார் (கதிரேசு சசிக்குமார் – கிளிநொச்சி)

68.வீரவேங்கை செல்வநந்தினி (செல்வராசா சகுந்தலாதேவி – திருகோணமலை)

69.வீரவேங்கை வெங்கடேஸ்வரன் (வடிவேல் சிவகுமார் – யாழ்ப்பாணம்)

70.வீரவேங்கை கிட்ணகுமார் (செல்வராஜா சந்திரகுமார் – யாழ்ப்பாணம்)

71.வீரவேங்கை ஜெயமதி (கணபதிபிள்ளை சறோசா – கிளிநொச்சி)

72.வீரவேங்கை ஜெனார்த்தினி (சீனிவாசகம் குணவதி – யாழ்ப்பாணம்)

73.வீரவேங்கை தட்சாயினி (சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரி – யாழ்ப்பாணம்)

74.வீரவேங்கை எழிலருவி (அருள்தாஸ் புஸ்பமலர் – கிளிநொச்சி)

75.வீரவேங்கை திருமலர் (யோகராசா கமலேஸ்வரி – திருகோணமலை)

76.வீரவேங்கை சுரபி (முத்துக்குமார் மோகனராணி – கிளிநொச்சி)

77.வீரவேங்கை துவாரகா (நல்லதம்பி கமலா – மட்டக்களப்பு)

78.வீரவேங்கை ரமணி (ஞானப்பிரகாசம் பெனடேற் – யாழ்ப்பாணம்)

79.வீரவேங்கை கவிமலர் (நல்லையா சத்தியகலா – கிளிநொச்சி)

80.வீரவேங்கை நவம் (முனீஸ்வரன் தவசீலன் – வவுனியா)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment