1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன்
அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான்.
இவனது செயற்பாடுகளைக் கவனித்த அப்போது கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளரான மாவீரரான லெப் கேணல். நரேஸ் அவர்கள் ராடர் நிலையத்திற்க்கு செல்லும் போது இவனையும் அழைத்துச் சென்று அங்கே ராடரில் எப்படி இலக்குகளை இணங்கானுவது போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் அதன் நுணுக்கங்களையும் அவனுக்கு விளங்கக்கூடிய வகையில் சொல்லிக் கொடுத்து அவனை ஒரு சிறந்த தொலைத்தொடர்பாளனாக வளர்த்துக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் நிலஆக்கிரமிப்பு நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கைக்கெதிரான விடுதலைப்புலிகளின் புலிப்பாய்ச்சலுக்கான கடற்சமரில் லெப்.கேணல் நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய சீராளனோ தனித்துவிட்டவனாக உணர்ந்தபோதும்
தலைவர் அவர்களையும் மாவீரர்களையும் மனதில் நினைத்து
தனது வழமையான செயற்பாடுகளில் புதிய உத்வேகத்துடன் ஈடுபட்டான்.தொடர்ந்து லெப் கேணல் நரேஸ் அவர்களின் நினைவாக கடற்தாக்குதல் படையணி உருவாக்கப்பட்டபோது இவனும் அ ங்கே சென்றான். மேலதிக பயிற்சிகளை முடித்தவன்.கடல் விநியோகப் பாதுகாப்புச் மற்றும் கடற்சமர்களிலும் பங்குபற்றியவன்.
தொடர்ந்து மாவீரரான லெப் கேணல் மங்களேஸ் அவர்களின் தலைமையில்
மேற்கொள்ளப்பட்ட தென் தமிழீழத்திற்கான விநியோக நடவடிக்கையிலும் செவ்வனவே பங்குபற்றினான்.அதனைத்தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்களின் வரவினையடுத்து அக்கனரக ஆயுதப் பயிற்சிக்கென உள்வாங்கப்பட்டவர்களுள் ஒருவனாக வந்த சீராளன் அப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.சிறந்த சூட்டாளனாக பயிற்சியை முடித்து வெளியேறியவன் கடற்புலிகளின் சாள்ஸ் படையணியில் இணைக்கப்பட்டு அக்கனரக ஆயுதத்துடன் கடற்சண்டைகளில் ஈடுபட்டான் .தொடர்ந்து தனது தனிப்பட்ட முயற்சியால் சண்டைப் படகின் தொலைத்தொடர்பாளனாக இரண்டாம் நிலைக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான்.சமாதன காலப்பகுதியில் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கடற்புலிகளின் கடற்படைக்கான கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சிக் கல்லூரியான லெப் கேணல் நிரோஐன் கடற்படைக் கல்லூரிப் பொறுப்பாளனாக சிறப்புத்தளபதி அவர்களாள் நியமிக்கப்படுகிறான்.அப்பணியிலும் சிறந்து விளங்கி பல போராளிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதுடன் தனது களஅனுபவங்களையும் சகபோராளிகளுக்கு படிப்பித்தான்.
சண்டை தொடங்கியவுடன் சண்டைப்படகின் கட்டளை அதிகாரயாகவும் .தொடர்ந்து சண்டைப் படகுகளின் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான்.கடற்சண்டைகளில் மிகவும் திறம்பட படகுகளை ஒருங்கினைத்து செவ்வனவே வழிநடாத்தினான்.இப்படியாக படிப்படியாக வளர்ந்த ஒரு போராளி ,
நீண்ட கடற்சண்டை அனுபவமுள்ள ஒரு சண்டைக்காரன்,தனக்குத் தெரிந்தவைகளை சகபோராளிகளுக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசான்,
எந்த வேலையாகிலும் அதை சரியான முறையில் திருப்தியுடன் செய்த வீரன்.
சக போராளிகளை மதிக்கிற பன்பு. ஒரு சிறந்த நிர்வாகி . இப்படியாக சீராளனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படிப்பட்ட ஒரு வீரனை 24.09.2006 அன்று தென்தமிழீழ விநியோகப் பாதுகாப்பு சமரின் போது புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலின்போது நாம் இழந்துவிட்டோம்.
லெப் கேணல் சீராளன்.
தேவதாஸ் சூரியவதனன்.
வீரச்சாவு ..24.09.2006
எழுத்துருவாக்கம்..சு.குணா.
