தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் விடுதலை அறைகூவலை நெஞ்சிலே சுமந்து கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம்
நெதர்லாந்தில் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் மற்றும் வெளிநாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சு , பெல்சியத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சு , லுக்சாம்பூர்க், யேர்மனி ஊடாக மாநகரசபைகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என பிரான்சு நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஆலோசனை அவை எனும் முக்கிய மையங்களிலும் பறைசாற்றியவாறு சுவிசு நாட்டினை வந்தடைந்தது.

சுவிசு நாட்டில் இருந்து பாசல், சொலொத்தூர்ன், லீசுட்டால் கடந்து பேர்ன் பாராளுமன்றம் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களை சந்தித்து தமிழர்களின் வேணவாவினை அறவழிப்போராட்டம் ஊடாக எடுத்துரைக்கப்பட்டது. சந்தித்து கலந்துரையாடிய அரசியல் மையங்கள் தாமும் வெளி நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை செவிசாய்க்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று 17/09/2021, 1180Km கடந்து Fribourg, Switzerland நோக்கி மனித நேய ஈருருளிப்பயணம் பயணித்துக்கொண்டு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது”
– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

