அர்ப்பணிப்புடன் சர்வதேசக் கடற்பரப்பில் களமாடிய போராளிகள்

0 0
Read Time:2 Minute, 59 Second

இந்தோனேசியாவிலிருந்த எமது படகுகளில் ஒன்றை சர்வதேசக் கடற்பரப்பிற்க்குக் கொண்டு வந்து அங்கு நின்ற எமது கப்பலில் இருந்து தமிழீழத்திற்க்குத் தேவையான பொருட்களுடன் அலம்பிலுக்கு வருவதற்க்கான ஒரு திட்டம் கடற்புலிகளின் சர்வதேசக்கடற்பரப்பில் நின்றவர்களுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது.

அதற்கமைவாக அந்த நேரம் தமிழீழத்தில் நின்ற லெப்.கேணல் ஸ்ரிபன் தலைமையிலான ஒரு அணி உருவாக்கப்பட்டு அவ் அணிகளில் சர்வதேசக் கடற்பரப்பில் நின்றவர்களுடன் மேலதிகமாக தமிழீழத்தில் நின்றவர்கள் சிலரும் இணைக்கப்பட்டனர். இவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வதற்காக தமிழீழத்திலிருந்து புறப்பட்டு சர்வதேசக் கடற்பரப்பினூடாக இந்தோனேசியா சென்று படகை எடுத்துக்கொண்டு கப்பலைச் சந்தித்து கப்பலில் உள்ள அந்த நேரம் தமிழீழத்திற்க்கு தேவையான முக்கிய  பொருட்களுடன் வந்துகொண்டிருந்தபோது 17.09.2006 அன்று  காலை அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலான கரோஐசால் வழிமறிக்கப்பட்டு சண்டை நடந்தது. ஒருகட்டத்தில் அதாவது மாலை  கரோஐசால் முடியாத கட்டத்தில் விமானப்படையினர் அழைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது . இந் நடவடிக்கையில் லெப் கேணல் ஸ்ரிபன் உள்ளிட்ட  பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்தனர். இச் சம்பவத்தில் வீரச்சாவடைந்த லெப் கேணல் ஸ்ரிபனின் இன்னும்  இரண்டு சகோதரங்கள் வெவ்வேறு களங்களில்  வீரச்சாவடைந்திருந்தனர். ஆனால் துரதிஸ்டம் இம் மூவரது வித்துடல்களும் மீட்கப்படவில்லை. ஸ்ரிபனை ஏற்கனவே இரணடு மாவீரர்கள் இருப்பதால் இவரை வீட்டுக்குச் செல்ல இயக்கம் அனுமதித்திருந்த போதிலும் இவரது பிடிவாதத்தால் இவர் வீட்டிற்க்கு செல்லாமல் தொடர்ந்து இயக்கத்தில் இருந்தார். இப்படியான எவ்வளவோ சம்பவங்கள் அர்ப்பணிப்புக்கள் நிகழ்ந்திருந்த போராட்டமாக தமிழீழப் போராட்டம் இருந்தனெ  கூறிக் கொள்வதில் மிகையாகாது.

எழுத்துருவாக்கம் ….  சு .குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment