தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடக்க காலகட்டத்தில் ஆங்காங்கே இலங்கை இராணுவத்தினர்மீதான சிறுசிறு பதுங்கித்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர்.பெரும்பலும் மக்களைப்பாதுகாக்கவும்,இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் கட்டுப்படுத்தவும்வேண்டி இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனலாம். விடுதலைப்புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் பலரும் பல்வேறு வகையில் தம்மாலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி விடுதலைக்கு வலுச்சேர்த்த வரலாறுகளும் பல உண்டு.
மேலும்Day: September 9, 2021
பிரெஞ்சு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 09/09/2021 இன்று வியாழக்கிழமை காலை Morre நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Mamirolle, Étalan, Premiers-Sapins, Pontarlier, Bulle, Frasne, Équevillon, Champagnole, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Champagnole, நகரசபையுடன் ஒன்பதாவது நாள் நிறைவடைந்தது.
மேலும்தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் எட்டாவது நாளாக பயணித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 08/09/2021 இன்று புதன்கிழமை காலை Belfort நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Danjoutin, Arbouans, Villars sous Écot, Voillans, Autechaux, Pouligney-Lusans, Braillans, École-Valentin, Besançon, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Besançon நகரசபையுடன் எட்டாவது நாள் நிறைவடைந்தது.
மேலும்