நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலீசாருடன் நேரில் ஆராயப்பட்டது. விசேட திருவிழாக்கள் மற்றும் பூசை நேரங்களை தவிர மீதி நேரங்களில் பயண கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொதுமக்களை ஆலய சூழலில் உள்ள கடைகளுக்கு செல்ல அனுமதிக்கவும் இணங்கப்பட்டது.
இது தொடர்பில் விசேட ஊடக அறிவிப்பு

•தற்கால கோவிட் 19 சூழலில் நல்லூர் கந்தன் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வீதித் தடைகளுக்கு உள்ளே உள்ள கடைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் தகுந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் சென்று அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேட பூஜை நேரங்களான காலை 04.00 – 5.30, காலை 10.00 12.00, மாலை 04.00 – 06.00 ஆகிய நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அனுமதி வழங்கப்படும்.



•விசேட திருவிழா நாட்களில் மேற்படி அனுமதி வழங்கப்பட மாட்டாது.


மேலும் இந்நடைமுறையில் தேவைப்படின் நாட்டின் சுகாதார நிலைமையின் அடிப்படையிலும் சுகாதார வைத்திய அதிகாரியின் மேலதிக பணிப்பின் அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.
யாழ். மாநகர முதல்வர்
வி.மணிவண்ணன்



