26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 17.07.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்ப் உள்ளரங்க மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியில் பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.
முதற்தடவையாக நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியானது ஐந்து வீரர்களைக் கொண்டதாக அமைந்ததுடன், மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் சூரிச் கரும்புலிகள் அணியினை எதிர்த்து சுவிஸ் கடற்பறவைகள் அணியும் மோதிக்கொண்டன. இறுதியில் சூரிச் கரும்புலிகள் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இச் சுற்றுப்போட்டியின் சிறந்த விளையாட்டு வீரராக சூரிச் கரும்புலிகள் அணியைச் சேர்ந்த வரதராஜன் ரிசிமேனன் அவர்களும், இறுதியாட்ட நாயகனாக அதே அணியினைச் சேர்ந்த நந்தகுமார் பிரதீப்குமார் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இச் சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விளையாட்டுத்துறை,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு











