Read Time:1 Minute, 0 Second
வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது கணவனால் வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த கோ.அனுசியா என்ற தனது மனைவியும் இரு பிள்ளைகளும் கடந்த 10ஆம் திகதி மாலை வீட்டிலிருந்து சென்ற நிலையில் இதுவரை வீடுதிரும்பவில்லை என அவரால் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம் -074-0244932.