பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களது 7-7-2021 ஆற்றிய உரை

0 0
Read Time:13 Minute, 30 Second

7-07-2021
பாராளுமன்றில் நேற்றய தினம் (07-07-2021) புதன்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் ஆற்றிய உரையாற்றியபோது


• அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சீனாவிடம் கடன் வாங்கியிருந்தால் நாடு இன்று இந்தளவு கடன்சுமையில் தள்ளப்பட்டிருக்காது. ஒரு புறம் ஆட்சி அதிகார வெறி மறுபுறம் தமிழர்களுக்கு எதிராக இனவெறி இந்த இரண்டு சூத்திரங்களும் கூட்டாக நாட்டை இன்றய அதலபாதாள நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
• 2009 ஆம் ஆண்டு சகல ஊடகங்களையும் வெளியேற்றிவிட்டு இனப்படுகொலை புரிந்தது போல் இன்று சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பை தடைசெய்துவிட்டு உங்களது மக்களை அழிக்கப்போகின்றீர்களா?
• யாழ் போதனா வைத்தியசாலை அபிவிருத்திக்காக யாழ் நகர மையப்பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணியைஇ இராணுவத்தினருக்கு வழங்குவதற்கு சுகாதர அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படல் வேண்டும்.
என்றும் வலியுறுததியிருந்தார்.
அவரது உரையின் முழுவிபரம் வருமாறு.
அவைத்தலைவர் அவர்களேஇ இன்றைய தினம் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டவிதிகள் தொடர்பான விவாதம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஏற்றுமதி சட்டங்களை திருத்துவதன் ஊடாக ஏற்றுமதி வருவாயை அதிகரித்துஇ இறக்குமதி செலவினங்களை கட்டுப்படுத்தி அந்நிய செலாவணியை ஈட்டி இந்த நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த சட்டத்திருத்தம் இங்கே கொண்டு வரப்படுகின்றது.
நல்ல விடயம். ஆனால் இந்த சந்தற்பத்தில் நீங்கள் ஒரு விடயத்தை சிந்தித்து பார்க்கவேண்டும்.
இந்தத் தீவிலே நடைபெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதுவும் ஒரு இன அழிப்பின் ஊடாகவே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவ்வாறு அந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்று 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இந்த 12 ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் உற்பத்தியை அதிகரிப்பதற்குஇ ஏற்றுமதி சார் உற்பத்திகளை அதிகரிப்புச் செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
2010 ஆம் ஆண்டிலிருந்து 15 ஆம் ஆண்டு வரைக்கும் பதவியிலிருந்த உங்களுடைய அரசாங்கமாக இருக்கலாம் அல்லது அல்லது 15 ஆம் ஆண்டிலிருந்து 19 ஆம் ஆண்டுவரை பதவியிலிருந்த இப்பொழுது எதிர்க்கட்சியில் இருக்கின்றவர்களது அரசாங்கமாக இருக்கலாம் இந்த ஏற்றுமதிசார் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்தீர்கள்.
முப்பது ஆண்டுகளாக எங்களை அழித்த நீங்கள் யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் வடகிழக்கு தமிழர்களை மையப்படுத்தி அபிவிருத்தி நோக்கி என்னத்தை செய்தீர்கள் என நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்று இந்த நாட்டிலே பெருமளவில் பேசப்படுகின்றவிடயம் நாடு பாரிய கடலிலே மூழ்கி இருக்கின்றது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு அதலபாதாள நிலையை எட்டிக் கொண்டிருக்கின்றது என்ற கதைகள் தான் இன்று பெருமளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நாடு சீனாவிடமிருந்து பெருமளவு கடன்களைப் பெற்றதால் இந்த நாடு சீனாவிற்கு விற்கப்பட்டுவிட்டதாக பேசப்படுகின்றது. இவ்வளவு பாரிய கடன்களைப் பெற்று 12 ஆண்டுகளிலே நாட்டை கடனிலேயே தான் மூழ்கடித்துள்ளீர்கள் என்றால் ஏற்றுமதி வருவாய் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றால் இறக்குமதிகளை நீங்கள் கட்டுப்படுத்தித்தான் நீங்கள் உங்களுடைய அந்நியச் செலவாணியை தக்கவைக்க வேண்டும் என்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது என்றால் நீங்கள் பெற்ற கடன்களை எல்லாம் நீங்கள் என்ன நோக்கங்களிற்காக கடந்த காலங்களிலேயே பயன்படுத்தியிருக்கிறீகள். நீங்கள் சீனாவிடமிருந்து பெற்ற கடன்களை சரியான அபிவிருத்தி நோக்கங்களிற்காக பயன்படுத்தியிருந்தால் நாடு ஏற்றுமதியில் முன்னேற்றம் அடைந்திருக்கும்.
ஆனால் இந்தத் தீவை மையப்படுத்தி நடைபெறுகின்ற பூகோள ஆதிக்கப்போட்டியிலே சீனாவுக்கு இந்தப் பிராந்தியத்திலே இந்த தீவிலே அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு கடன் பெறப்பட்டிருக்கின்றது.
இது உண்மையில் ஒரு அபிவிருத்தி நோக்கத்தோடு பெறப்பட்டிருந்தால் உண்மையில் இன்று இந்த நாடு அபிவிருத்தி நோக்கி எவ்வளவோ முன்னேறியிருக்க முடியும்.
இவ்வாறான நிலைமை ஏற்பட்டதற்குரிய பிரதானமான காரணம் ஆட்சியாளரான உங்களுடைய மனநிலையே. அதாவது ஒரு புறம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற அதிகார வெறிஇ
மறுபுறம் வடகிழக்குத் தமிழர்களை இல்லாதொழித்து வடகிழக்கை முழுமையாக சிங்கள மயப்படுத்தி ஒரு சிங்கள பௌத்த பூமியாக மாற்ற வேண்டும் என்கின்ற இனவாத வெறிபிடித்த மனநிலை.
இந்த இரண்டு சூத்திரங்களும் இன்று உங்களைக் கொண்டு வந்து ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளியிருக்கின்றது. அதாவது ஒரு புறம் ஆட்சியதிகார வெறி மறுபுறம் இனவாத வெறி.
இந்த இரண்டு சூத்திரங்களையும் நீங்கள் இணைத்து பயன்படுத்துகின்ற பொழுது சிங்கள் மக்களை நீங்கள் எப்படி தமிழர்களுக்கெதிராக தயார்ப்படுத்தியிருக்கிறீர்கள் என்றால்இ புலிகள் வந்து விடுவார்கள் நாட்டைப் பிரித்து விடுவார்கள் நாடு பிரிந்து விடும் என்ற பைத்தியக்காரக் கதைகளை சிங்கள மக்களுக்குச் சொல்லி இனவாதத்தை ஊட்டி ஊட்டி அந்த அடிப்படையில் சிங்கள அந்த மக்களை தயாh்படுத்தி வைத்திருப்பதன் விளைவு தான் இன்று இந்த நாடு சந்திருக்கின்ற பாரிய பின்னடைவுக்கு காரணம்.
இன்றும் கூட தமிழர்களோடு உரிமைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்துஇ தமிழர்களுடைய தேசத்தை அங்கீகரித்துஇ தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து அவர்களையும் சமத்துவமாக ஏற்றுக் கொண்டு இந்த நாட்டினுடைய அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கம் எதிர்க்கட்சியில் இருப்பவார்களுக்குக் கூட இல்லை.
இந்த மனநிலை மாறாதவரை இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதையும்இ வெறும் அபிவிருத்தி சட்டங்களை மாற்றியமைப்பதன் ஊடாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
அடுத்து
யாழ்ப்பாண நகர மையப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் காணி உள்ளது. வைத்தியசாலை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டிய காணி இராணுவத்தினருக்கு வழங்கப்படுவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு போதனா வைத்தியசாலையாக இருக்கிறபோதும் கூட அங்கு இன்று வரை மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவ கற்கை விடுதி (Professorial Unit) இல்லை. அதனை அமைப்பதற்குரிய இடம் கிடையாது. இதுவரை புறொவ்பெசோரியல் கற்கை அலகு கட்டப்படவில்லை.
அதேபோன்று
மகப்பேற்று சிகிச்சை விடுதியில்லை
சிறுவார் சிகிச்சை விடுதியில்லை
கண் சிகிச்சை விடுதியில்லை.
அப்படியிருக்கும்போது அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை இராணுவத்தினருக்கு வழங்கப்படுவதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
நாங்கள் இந்த அவையிலே எத்தனையோ தடவை சுகாதாரத் துறையில் இருக்கின்ற குறைபாடுகளை சுகாதார அமைச்சருக்கு சுட்டிக் காட்டியிருக்கிறோம். ஆனால் அவருக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை. ஆனால் இராணுவ மயமாக்கல் என்ற நோக்கத்தோடு அவர் செயற்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். அந்தக் காணி வைத்தியசாலை அபிவிருத்திக்காக வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த இடத்தில் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக சிறுவர் வைத்தியசாலைக்காக புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் திரட்டி இணுவிலிலே வைத்தியசாலை கட்டுவதற்குரிய முயற்சிகள் நடைபெறுகின்ற பொழுது இந்தக்காணியை இராணுவத்திற்கு கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இந்த விடயங்களை அரசாங்கம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து
சக்தி உள்ளடங்கலான சிரச தொலைக்காட்சி வலையமைப்பை தடைசெய்வதற்கு அரசாங்கத்தின் உயா்மட்டம் தீர்மானித்திருப்பதாக அறியக்கிடைத்திருக்கின்றது. இந்த செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த சிரச சக்தி ஊடகம் என்பது தமிழ் முஸ்லீம் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை துணிந்து அம்பலப்படுத்தும் ஒரு ஊடகமாக இருக்கிறது. அந்த ஊடகத்தின் பணி பாராட்டக்கூடியது. போற்றக்கூடியது. அந்த ஊடகத்தை தடை செய்ய அரசாங்கம் எடுத்திருக்கின்ற முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அரசு இதற்குரிய விளைவுகளை சந்திக்கும். 2009 யுத்தம் நடைபெறுகின்ற பொழுது ஊடகங்களை வெளிடயேற்றிவிட்டு இனஅழிப்பை நிறைவேற்றினீர்கள். இன்று சக்தி சிரச ஊடக வலையமைப்பை தடை செய்துவிட்டு உங்களுடைய மக்களை அழிக்கப் போகிறீர்களா? அதற்காகவா நீங்கள் தயாராகிறீகள் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment