ஜோசெப் மாஸ்டர் சாவை தழுவியுள்ளார்

0 0
Read Time:2 Minute, 17 Second

விடுதலைப்போராட்டத்தை நேசித்த மற்றுமொரு முன்னள் போராளியான ஜோசெப் மாஸ்டர் யாழில் சாவை தழுவியுள்ளார். ஜோசெப் மாஸ்டர் இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீள கைதாகி இரண்டுவருடம் சிறையில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தனது மகளையும் மாவீரராக விடுதலைபோராட்டத்திற்கு ஈகம் செய்திருந்த அவர் போரியல் நூல்களை மொழிபெயர்ப்பதில் முக்கிய பங்காற்றினார்.

தாயகம் நோக்கிய பயணம்’ எனும் லியோன் யூரிஸ் எழுதிய அற்புத படைப்பை கச்சிதமாய் தமிழாக்கம் செய்திருந்தார் ஜோசெப் மாஸ்ரர்.

ஈழநாதம் வெளியீடாக யாழ்ப்பாணத்திலிருந்து அச்சிடப்பட்ட அந்த நூல் கடுமையான பொருளாதார தடையின் மத்தியிலும் பாடசாலைப்பிள்ளைகள் பயன்படுத்தும் பாடக்கொப்பித்தாளில் அந்நாட்களில் இந்நூல் வெளியிடப்பட்டது.

வரிவரியாய் கோடுகள் ஓட அதன் இடையிடையே அச்சடிக்கப்பட்ட கதைகளம் விரிந்து வாசிப்போரை உள்ளீர்த்து. வாசிப்போரை வசியம் செய்யும் மொழிநடை. ஒரு பிறமொழி படப்பை தன் மொழியாற்றலால் தமழ்மொழிபடைப்பு போல தமிழர் தேசமெங்கனும் இரண்டாம் உலகப்போரின் வலியை ஒவ்வொருவர் மனங்களிலும் உறையசெய்தவர். மாஸ்டர் எளிமையானவர் .நட்பை ,நயத்தை,மற்றவர் மதிப்பையும் மான்பையும் குளைக்காது உரிமையோடு பழகும் ஒரு உன்னத மனிதர்.

யாழ்ப்பாணத்தின் குருநகரில் தனது மனைவியுடன் மகளின் நினைவுகளுடன் வாழ்ந்து வந்த அவரிற்கு தேச அஞ்சலிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment