முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி , மேஜர் நிதன் , கப்டன் சாதுரியன் 24ம் ஆண்டு வீரவணக்க நாள்

0 0
Read Time:5 Minute, 30 Second

10.06.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

கரும்புலி மேஜர் யாழினி
சிவசுப்ரமணியம் ராகினி
யாழ்ப்பாணம்

கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்)
மாணிக்கம் அருள்ராசா
மட்டக்களப்பு

கரும்புலி கப்டன் சாதுரியன்
நடராசா அரசரட்ணம்
மட்டக்களப்பு

ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி மற்றும் கரும்புலி மேஜர் நிதன் , கரும்புலி கப்டன் சாதுரியன்

தாண்டிக்குளம் – நொச்சிமோட்டை தாக்குதல்…
புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது.

திருவுடலில் வெடி சுமந்து …

ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்தது. சண்டைகளுக்குத் தேவையான வெடிபொருட்களும் – மருத்துவ சாமான்களும் இந்தப்பகுதியிலேயே களஞ்சியப்படுத்தபப்ட்டிருந்த ஆட்லறி குண்டுகள் – மோட்டார் எறிகணைகள் – யுத்த ராங்கி குண்டுகள் என்பன ஐயசிக்குறுய் பூதத்தின் பிரதான உணவுகளாக இருந்தன. பூதத்தை பட்டனை போட்டு அதன் இயக்கத்தை மந்தப்படுத்தும் தந்திரத்தை புலிகள் கடைப்ப்பிடித்தனர். இத் தாக்குதலில் பலாயிரம் எறிகணைகளும் , பல நூறு யுத்த ராங்கி குண்டுகளும் தீயில் அழிந்தன. பல இராணுவ வாகனங்கள் அழிக்கபப்ட்டன. சில கைப்பர்ரபப்ட்டன. இதேசமயம் குறைந்த 400 படையினர் கொல்லப்பட்டு , 570 ற்கு அதிகமானோர் காயமடைந்திருந்தனர். தாக்குதல் வலையத்திற்க்குள் சிக்குப்பட்ட படையினருக்கு உதவ உலங்கு வானூர்த்திகளில் வந்திறங்க சிங்களக் கொமாண்டோக்கள் முயன்றனர்.

தம்பி நிதனோடு தங்கை யாழினி எங்கள் சாதுரியன்

இந்த முயசியில் ஒரு ” எம் . ஐ . 24 ” உலங்கு வானூர்த்தி கடும் சேதத்திற்கு உள்ளானது. ஓமந்தைப் பகுதிகளில் இருந்து உதவிக்கென நொச்சிமோட்டைப் பகுதிக்குள் நூலைய முயன்ற படையினர் மீது தாக்குதல் நடத்தபப்ட்டது. இதில் இரண்டு ராங்குகள் அழிக்கப்பட்டன. குறைந்தது 24 மணிநேரமாக தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன.

ஐயசிக்குறுய் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது. ” புலிகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ” என்ற அரசின் பிரச்சாரத்தின் மத்தியில் , தப்பிப்பிழைத்த தாண்டிக்குளம் படையினர் சிலர் தங்களை உருமாற்றி – சிவிலியன் உடையணிந்து – வவுனியாவுக்குள் ஓடினர் என்று செய்திகள் வெளிவந்தன. இப்பெரும் தாக்குதலின் போது மூன்று கரும்புலிகள் உட்பட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

உயிராயுதம் பாகம் : 06

– விடுதலைப்புலிகள் இதழ் ( வைகாசி – ஆனி : 1997 )

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment