Read Time:1 Minute, 8 Second
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதி வேண்டி,பிரித்தானிய பிரதமர் இல்லம் இல 10 downing Street க்குமுன்பாக. இன்று (மே18) காலை 10 மணிக்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்துடன். 12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் ஆரம்பமானது.
அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஈகைச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு ஈசன் அவர்கள் ஏற்றி வைத்தார் . தொடர்ந்து நினைவு படத்திற்கான மலர் மாலையினை முன்னாள் போராளிகளான திருமதி சாயந்தினி மற்றும் தர்சினி அவர்கள் அணிவித்தார்கள் . தொடர்ந்து .அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.







